கிளி. இல் கொரோனா சமூக தொற்றில்லை – பரவலை மட்டுப்படுத்தி கட்டுப்படுத்த களத்தில் அமைச்சர் டக்ளஸ்!
Friday, May 7th, 2021கிளிநொச்சி மாவட்டத்தில் கொறோனா வைரஸ் பரவல் இதுவரை சமூக தொற்றாக மாற்றமடையவில்லை என்று தெரிவித்துள்ள மாவட்ட சுகாதார வைத்திய பணிபபாளர் வைத்திய கலாநிதி சரவணபவன், சுமார் ஆயிரம் கொறோனா நோயாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான் கட்டமைப்பு வசதிகள் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று(07.05.2021) இடம்பெற்ற கொறோனா தொடர்பான கலந்தாய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்துள்ளார்.
எனினும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பாதுகாப்புத் தரப்பினரின் ஒத்துழைப்புடன் கொறோனா தொற்றாளர்களுக்கான வைத்திய வசதிகள் ஏறாபடுத்தப்பட்ட நிலையில், அனைத்து இடங்களிலும் சமகாலத்தில் வைத்திய சேவையை மேற்கொள்வதற்கு ஆளணிப் பற்றாக்குறை காணப்படுவதாகவும், இதுதொடர்பாக சுகாதார திணைக்களத்திற்கு தெரியப்படுத்தியிருப்பதாகவும் தெரிவித்தார்.
அதேபோன்று, போக்குவத்துக்களுக்கான வாகன வசதி போன்ற சில தேவைகள் தொடர்பாகவும் வைத்திய அதிகாரியினால் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தது.
இவைதொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மாவட்டத்திற்கான தேவைகள் அனைத்தையும் உள்ளடக்கிய கோரிக்கையை எழுத்து மூலம் தரும்படி கேட்டுக் கொண்டதுடன் அமைச்சரவையிலும் சுகாதார அமைச்சருடனும் கலந்துரையாடி தேவைகளை நிவர்த்தி செய்ய முடியும் எனவும் தெரிவித்தார்.
மேலும், கொறோனா பரவுவதை கட்டுப்படுத்துவதற்கான வேலைத் திட்டத்தில் அரச அதிகாரிகள் அனைவரும் சுய பாதுகாப்புடன் அர்ப்பணிப்பை வெளிப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்ட கடற்றொழில் அமைச்சர், நடைமுறைச் சிக்கல்கள் ஏற்படுமாயின் உடனடியாக தன்னுடைய கவனத்திற்கு கொண்டு வருமாறும் தெரிவித்தார்.
அதேவேளை, கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் துறைசார் அதிகாரிகளுடனான விசேட கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த கடற்றொழில் அமைச்சர், கிளிநொச்சி மாவட்டத்தில் கணிசமானளவு நெல் உற்பத்தி செய்யப்படுகின்ற போதிலும் அவற்றை காயவிட்டு பதனிடுவதில் காணப்படுகின்ற குறைபாடுகளினால் சரியான சந்தை வாய்ப்பினைப் பெற்றுக் கொள்வதில் விவசாயிகள் அசௌகரியங்களை எதிர்கொள்வதாக சுட்டிக்காட்டியதுடன், அதுதொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அந்தவகையில், சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் மாவட்டத்தில் பல்வேறு பாகங்களில் சுமார் பத்து நெல் காய வைக்கும் நிலையங்களை அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
மேலும், விவசாய நடவடிக்கைகளுக்கு செயற்கை பசளைகளை பயன் படுத்த எமது விவசாயிகளை ஊக்குவிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
Related posts:
|
|