கிளிநொச்சி வைத்தியசாலையில் தீ விபத்து – நிலைமைகளை நேரில் சென்று பார்வையிட்ட அமைச்சர் தேவானந்தா!

Friday, January 21st, 2022

கிளிநொச்சி வைத்தியசாலையில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், அங்கு சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விபத்து ஏற்பட்ட பகுதியை பார்வையிட்டார்.

இன்று காலை வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர், சம்பவ இடத்தை பார்வையிட்டதுடன், சம்பவம் தொடர்பிலும் கேட்டறிந்தார்.

அதனை தொடர்ந்து கிளிநொச்சி சுகாதார வைத்திய அதிகாரி சரவணபவன், வைத்தியசாலை பணிப்பாளர் சுகந்தன் மற்றும் வைத்தியர்களுடன் விசேட கலந்துரையாடலிலும் டக்ளஸ் தேவானந்தா ஈடுபட்டார்.

இதேவேளை தீ விபத்து தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், தடயவியல் பொலிசார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அத்துடன் கிளிநொச்சி மருத்துவமனையில் நேற்றிரவு ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் பல மருத்துவ உபகரணங்கள் தீக்கிரையாகியிருந்தது. எனினும்  தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணங்கள் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.   

Related posts:


அமைச்சின் எந்த நிறுவனத்திலும், முறைகேடுகளுக்கோ, துஷ்பிரயோகங்களுக்கோ இடமில்லை - அமைச்சர் டக்ளஸ் தேவான...
ஆட்சி மாற்றம் உருவானதும் தமிழ் மக்கள் எதிகொள்ளும் நடைமுறை சார்ந்த பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு ...
வடக்கில் மண்ணெண்ணை பிரச்சினைக்கு முதற் கட்டத் தீர்வு - அமைச்சர் டக்ளஸ் தலைமையில் திட்ட வரைபு!