கிளிநொச்சி மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு உணவுப்பொதிகள் வழங்க ஏற்பாடு – கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Thursday, November 5th, 2020

கிளிநொச்சி மாவட்டத்தில் கொரோ தொற்றுச் சந்தேகம் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் றிவுறுத்தலுக்குமைய 10,000 ரூபா பெறுமதியான உணவுப்பொதிகள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவரும், கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் குறித்த மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் ஒருங்கிணைப்புக்குழு தலைவரின் இணைப்பாளரும், முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினருமான வை.தவநாதன் விடுத்த அவசர வேண்டுகோளுக்கமைய, மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் இதற்கான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டு வருகிறார்.

முன்னதாக, கடந்த 3 ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு நடைபெற்ற கொரோணா பாதுகாப்புச் செயலணிக் கூட்டத்தில், மேலதிக அரசாங்க அதிபர் சிறிமோகனன், பிரதமர் அலுவலகத்தினால் இதுதொடர்பான சுற்றறிக்கை மாவட்டச் செயலகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்திருந்தார்.

இதன்பிரகாரம், இந்த 10,000 ரூபா பெறுமதியான உணவுப் பொதிகளை, இரண்டு பிரிவுகளாக தலா 5,000 ரூபா பெறுமதியான பொதிகளாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகளை மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் மேற்கொண்டு வருகிறார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் 90 குடும்பங்களைச் சேர்ந்த 487 பேர் இவ்வாறு கொரோணா தொற்று அச்சம் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக பிரதி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சரவணபவன் நேற்றைய கூட்டத்தில் தகவல் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

உருத்திராட்ச மாலை அணிந்த பூனைககள் மக்களை தவறாக வழிநடத்த முற்படுகின்றன - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி....
இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின மீன் விற்பனை நிலையம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் சம்பி...
சுயலாப அரசியல் நடத்திவரும் தமிழ் தலைமைகள் போல் நானும் இருந்து விட முடியாது – அமைச்சர் டக்ளஸ் தேவானந்...

வடமராட்சி ஆதிகோவிலடி சிதம்பரா குடியிருப்பு பகுதி மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத்த...
அர்த்தமுள்ள வகையில் மீள்குடியேற்றம் செய்யாது இந்தியாவிலிருப்பவர்களை எந்த நம்பிக்கையில் அழைப்பது? – ந...
13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு சேதாரம் இல்லை - அடித்து சொல்கிறார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!