கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா – கிராமிய நீர் வழங்கல் திட்ட இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த இடையே விசேட சந்திப்பு!

Monday, March 7th, 2022

நாரா நிறுவனத்தினால் அடையாளப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ளூர் இழுவைமடி வலைத் தொழிலில் ஈடுபடுவதற்கு, குறித்த தொழில் முறையை நீண்ட காலமாக பயன்படுத்தி வருகின்றவர்களுக்கு அனுமதிக்க வேண்டியதன் அவசியம் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.

இது குறித்து கிராமிய நீர் வழங்கல் திட்ட இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இதேவேளை சிலாபம், இரணவில எனும் இடத்தில் தனியார் முதலீட்டில் உருவாக்கப்பட்டுள்ள கடலட்டை மற்றும் நண்டு குஞ்சு இனப்பெருக்க நிலையத்தினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பார்வையிட்டார்.

கடற்றொழில் மற்றும் நீர்வேளாண்மையை விருத்தி செய்வதற்கு தனியார் முதலீட்டாளர்களை உற்சாகப்படுத்தி வருகின்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இண்டிக்கோ பிறைவேட் லிமிடெட் நிறுவனம் எனும் உள்ளூர் முதலீட்டில் உருவாக்கப்பட்டுள்ள குஞ்சு இனப் பெருக்க நிலையத்தினை பார்வையிட்டதுடன், தனியார் முதலீட்டாளர்களின் முயற்சியை வரவேற்று உற்சாகப்படுத்தியிரந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

அத்துமீறும் கடலட்டை பிடிப்பு விவகாரத்துக்குக் கிடைத்தது தீர்வு - கடற்றொழில் அமைச்சருடன் தமிழ் நாடாளு...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட டீசல் உத்தியோகபூர்வமாக கையளிப்பு!
இழுவைமடித் தொழிலுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் மறைமுகமான ஆசீர்வாதம் இருப்பதாக வெளியாகும் விமர்...

யாழ்ப்பாணம் - ஊர்காவற்றுறை சேவையில் ஈடுபடும் பேருந்துகள் தொடர்பிலான இடர்பாடுகளுக்கு தீர்வு பெற்றுத்த...
இவ்வருட இறுதிக்குள் வளமான வாழ்வாதாரத்தை உருவாக்கித்தர நடவடிக்கை - தேவன்பிட்டி மக்களிடம் அமைச்சர் டக்...
தேசிய நல்லிணக்கதை சிதைக்கும் பிரகிருதிகளின் செயற்பாடுகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் - அமைச்சர் டக்ளஸ...