என் கடன்,பணிசெய்துகிடப்பதே! சொல்வதை செய்வோம்!! செய்வதை சொல்வோம்!!!

Monday, December 10th, 2018

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அவர்களது ஆசிர்வாதத்துடன் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சராக 29.10.2018 அன்று பொறுப்பேற்று,இந்துமத அலுவல்கள் அமைச்சின் ஊடாகநான் மிகச் சொற்பகாலத்தில் முன்னெடுத்த சில நடவடிக்கைகள்!….

(அநேகமான நடவடிக்கைகளுக்கு தேவையான அமைச்சரவைப் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்பட்டும், தயாரிக்கப்பட்டுமுள்ளது)

01. முதற்கட்டமாக அடையாளம் காணப்பட்ட ஏழு வரலாற்றுச் சிறப்புமிக்க புனிதத் தளங்களான 01. திருக்கேதிஸ்வரம், 02. திருக்கோணேஸ்வரம், 03. நகுலேஸ்வரம், 04. முன்னேஸ்வரம், 05. தான்றோன்றிஸ்வரம், 06. மாவிட்டபுரம் கந்தசாமிகோவில், திருமுருகண்டிப் பிள்ளையார் கோவில் ஆகியவற்றின் அமைவிடப் பிரதேசங்களை புனிதப் பிரதேசமாகப் பிரகடனம் செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளேன்!….

2.திருமுருகண்டி ஆலயத்தைப் புனரமைப்புச் செய்வதுடன், பக்தர்கள் வழிபட்டுச் செல்வதற்கான சகலவசதிகளையும் அங்கு ஏற்படுத்திக் கொடுப்பதற்கு தேவையான பணிகளை முன்னெடுத்துள்ளேன்!…

3. மூன்றாவது அகில உலக இந்துமாநாட்டை சிறப்பாக இலங்கையில் நடத்துவதற்குத் தேவையான ஆயத்தப்பணிகளை மேற்கொண்டுள்ளேன்.

4. கோயில்களில் பூஜைகளைத் தொடர்ந்து, பிரசங்கங்களை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்வதன் ஊடாகமக்களிடையே ஆன்மீகம் மற்றும் வாழ்வியல் ஒழுக்கம் சார்ந்த விழிப்பூட்டல்களை ஏற்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளும் முயற்சிகளை ஆரம்பித்திருகின்றேன்.

5.யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இந்துநாகரீகத்துறையை, இந்துநாகரீக் கற்கைகள் பீடமாகதரம் உயர்த்த இந்துநாகரீகத்துறையின் தலைவர், விரிவுரையாளர்களின் ஆலோசனைகள் பெறப்பட்டு அதைவிரைவுபடுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்ததுடன், மேலும் அவர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகளான, இந்துநாகரீகத்துறையில் பட்டம் பெற்றவர்களை இந்துசமயம் கற்பிக்கும் ஆசிரியர்கள் நியமனங்களில், கலாசார உத்தியோகத்தர்; பதவிகளில், கல்வி அமைச்சில் சமயபாடத்திற்கான உதவிப்பணிப்பளர்களின் வெற்றிடங்களில், இந்து/சைவசமயப் பாடத்திற்கான ஆசிரியர் ஆலோசகர் நியமனங்கள் போன்றவற்றில் முன்னுரிமை வழங்குதல், இந்துஃசைவசமயத்தை மேம்படுத்தவும், பாதுகாக்கவும், அவர்களால் முன்வைக்கப்பட்ட ஏனைய கோரிக்கைகள், குறைபாடுகளை நிவர்த்திசெய்வதற்கும் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளேன்.

6.இந்தியாவின் கேரளமாநிலத்தில் அமைந்துள்ள ஐயப்பசுவா மிதேவஸ்தானத்திற்கு இலங்கையிலிருந்து மாலைபோட்டு, விரதமிருந்து ஆயிரக்கணக்கில் செல்லும் யாத்திரிகர்களின் பலவருட கோரிக்கையாக இருந்துவந்த ஐயப்ப யாத்திரையை தேசிய புனிதயாத்திரையாக அரசுபிரகடனம் செய்யவேண்டும் என்றகோரிக்கையை அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பித்து குறுகியகாலத்திற்குள் ஐயப்பயாத்திரையை தேசிய புனித யாத்திரையாகப் பிரகடனம் செய்ததுடன்,அதன் பலாபலன்களையும், வரப்பிரசாதங்களையும் அவர்களுக்கு பெற்றுக்கொடுக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளேன்.

7. ஐயப்ப புனிதயாத்திரை செல்லும் யாத்திரிகர்கள் குறித்தகாலத்தில் அதிகமான செலவில் விமானப் பயணத்தை மேற்கொள்வதால் அவர்களின் பயணத்தை இலகுபடுத்தும் நோக்கிலும், சபரிமலைக்கான பயணத்தின் போது ஏனைய புனிதத் தளங்களையும் தரிசித்துச் செல்லக்கூடிய வகையிலும் தலைமன்னாருக்கும், இந்தியாவின் இராமேஸ்வரத்திற்கு மிடையே விசேட கப்பல் போக்குவரத்து ஒன்றை ஆரம்பிப்பதற்கும் அமைச்சரவைப் பத்திரம் ஒன்றைசமர்ப்பித்து அதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளேன்.

8. வடக்கு,கிழக்கில் யுத்தத்தினாலும், வன்செயல்களினாலும் 800க்கும் மேற்பட்ட ஆலயங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அந்த ஆலயங்களை புனரமைப்புச் செய்துமீளவும் கட்டியெழுப்புவதற்கு 1382 மில்லியன் ரூபாய்கள் தேவையாக இருக்கின்றது. அந்தநிதியைப் பெற்றுக்கொள்வதற்கு அமைச்சரவைப் பத்திரம் ஒன்றைச் சமர்ப்பிக்கவுள்ளேன்.

9. பாடசாலை மாணவர்களின் சைவநெறிபாட நூல்களில் காணப்படும் குறைபாடுகளை நிரந்தரமாக நீக்குவதற்குகாத்திரமான செயற்திட்டமொன்றை மேற்கொள்வதற்கு ஏதுவாக பாடசாலை ஆசிரியர்கள், கல்விமான்களைக் கொண்டகுழுவொன்றின் கலந்துரையாடல் மூலம் பொதுவானகொள்கை ஒன்றைவகுப்பதுடன், எதிர்காலத்தில் வெளியிடப்படும் பாடசாலை நூல்களுக்கான வழிகாட்டல் ஒன்றைதயாரித்துகல்வி, உயர்கல்வி அமைச்சுக்களுக்கு வழங்குவதற்கும் முயற்சிகளை முன்னெடுத்துள்ளேன்.

10. பாடசாலைமாணவர்களின் வரலாற்றுப்பாடத்தில் இலங்கைத் தமிழர்களின் வரலாறு தொடர்பாக திரிவுபடுத்தபட்டதும், மறைக்கப்பட்டது மானகாணப்படுகிறது. அவற்றை சீரமைத்து இலங்கைத் தமிழர்களின் உண்மையான பூர்வீகவரலாற்று பதிவுகளை உரியமுறையில் உள்வாங்குவது தொடர்பாகவும் தேவையான நடவடிக்கைகளை முன்னேடுத்துள்ளேன்.

11. இலங்கையில் இந்துசமய அறநெறிக் கல்வியைமேம்படுத்தி விரிவாக்குவதற்கு துரித அபிவிருத்தித் திட்டமொன்றை செயற்படுத்துவதற்கும் முயற்சிகள் முன்னேடுத்துள்ளேன்.

12. இலங்கையில் இந்துக்களுக்கு அவர்களது சமயகலாசார கற்கைகளைப் பெறுவதற்கு ஏதுவாகவும், இந்துஃசைவசமயம் சார்ந்தவிவகாரங்களை ஆராயவும், தேசியகற்கைகள் நிறுவனம் ஒன்றை உருவாக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுத்துள்ளேன்.

13. தமிழ் மொழியின் நீண்டநெடிய வரலாற்றில் தமிழ் மொழியானது பல்வேறு இடர்பாடுகளை எதிர்கொண்டதுடன், மௌனித்தும் கிடந்தது. அச்சூழலில் ஆன்மீக இலக்கியங்களே தமிழ் மொழியை அழியவிடாது தூக்கிநிறுத்தியிருக்கின்றன. இதுவேளை கடந்த மூன்று தசாப்தகாலங்களில் இலக்கிய முன்னெடுப்புக்கள் பலவும் மக்களின் வாழ்வியலை சார்ந்து சிந்திப்பதை தவிர்த்து போரியல் சூழலுக்குள் மட்டும் மூழ்கிக் கிடந்து. இதை நிவர்த்தி செய்வதற்காகவும் மொழியை பாதுகாப்பதற்கும் அதைமேலும் வளர்த்தெடுக்கவும், படைப்பாளிகளை ஊக்குவிக்கும் நோக்கிலும் ஆன்மீகம் மற்றும் இலக்கியசார்ந்த படைப்பாளர் சங்கத்தை உருவாக்கும் திட்டத்தை நான் தொடங்கியுள்ளேன்.

14. இந்துஃசைவசமயமேம்பாட்டுக்காக எதிர்காலத் திட்டங்கள் தொடர்பில் ஆக்கபூர்வமான ஆலோசனைகளைப் பெறுவதற்கும், இலங்கையில் வாழ்கின்ற இந்துஃசைவமக்கள், இந்து/ சைவக்குருமார்கள், இந்துநிறுவனங்கள், ஆலயங்கள், அறநெறிப் பாடசலைகள் எதிர்கொள்கின்ற சவால்களை கவனத்திற் கொள்வதற்கும், இந்து / சைவசமயம் சார்ந்த மேம்பாட்டுகொள்கை ஒன்றைவகுப்பதற்காக மேற்குறிப்பிட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகளினதும், ஆர்வமுள்ளசமூகப் பிரதிநிதிகளினதும் ஆலோசனைகளை எழுத்தில் பெற்றுக்கொள்வதற்கும், அதன் பின்னர் அவர்களை அழைத்துக் கலந்துரையாடிதிட்டங்கள் வகுத்து செயற்படுத்துவதற்கும் முயற்சி எடுத்துள்ளேன்.

நாமார்க்கும் குடியல்லோம்!
நமனைஅஞ்சோம்!!
நரகத்தில் இடர் படோம்!!!…

என்றும் உங்களுடன்
டக்ளஸ் தேவானந்தா!…
unnamed (1)  47249471_1967236383577641_872591845350178816_n 47363148_364640010956762_504635558945882112_n

46831004_265936770719502_1151080449695547392_n

Related posts: