எங்கள் மக்களின் இழப்புக்களுக்கு, இழப்பீட்டுக்கொடுப்பனவுகள் ஆறுதலாகவே இருக்கும். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Saturday, November 17th, 2018

யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து யுத்தம் மற்றும் வன்செயல்கள் காரணமாக தமது சொத்துக்கள் மற்றும் உயிரிழப்புக்களுக்கான நஸ்ட ஈட்டுத் தொகையைப் பெற்றுக்கொள்வதற்காக புனர்வாழ்வு அதிகார சபைக்கு விண்ணப்பித்தவர்கள் தமது விண்ணப்பங்களை உறுதிப்படுத்திக் கொள்வதற்காகவும், மேலும் தேவையான விபரங்களைப் பெற்றுக்கொள்வதற்காகவும் இம்மாதம் 25ஆம் திகதி காலை 10 மணிக்கு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்திற்கு வருகை தருமாறு மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் என்றவகையில் கேட்டுக்கொள்கின்றேன்.

எமது மக்களின் ஈடற்ற உயிரிழப்புக்களுக்கும், வியர்வை சிந்தி உழைத்த சொத்து இழப்புக்களுக்கும், தற்போது வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையானது போதுமானதாக இல்லை என்பதை நான் அறிவேன். இதுதொடர்பாக விசேட அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை சமர்ப்பித்து நியாயமான இழப்பீட்டுத் தொகையை எமது மக்களுக்குப் பெற்றுக்கொடுக்க முயற்சித்து வருகின்றேன்.

எமது மக்களுக்கு இந்த இழப்பீட்டுத் தொகையானது ஆறுதலாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன், தேங்கிக் கிடக்கும் இழப்பீட்டுத் தொகையை விரைவான நடவடிக்கைகளை மேற்கொண்டு உங்களுக்குக் கிடைக்கச் செய்ய நடவடிக்கை எடுத்துவருகின்றேன்.

இதுவரையில் இழப்பீட்டுத் தொகையை பெற்றுக்கொள்ள விண்ணப்பம் செய்யத்தவறியவர்கள், குறித்த விண்ணப்படிவங்களை உரியவாறு நிரப்பி, உறுதிப்படுத்தி எனது அமைச்சிற்கோ அல்லது உங்கள் பகுதி பிரதேச செயலாளர்கள் ஊடாக எனக்கு முகவரி இட்டோ உடனடியாக அனுப்பி வைத்தால், காலதாமதத்திற்கு இடமளிக்காமல், முடிந்தளவு விரைவாக உங்கள் கோரிக்கைக்கான பதிலையும், இழப்பீட்டைப் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கையையும் எடுப்பேன்.

Related posts:

நாம் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்தபோது எம்மை விமர்சனம் செய்தோர்  இன்று அபிவிருத்திப் பணிகளில் த...
நாவலர் கலாசார மண்டப வாக்குச் சாவடியில் தனது வாக்கைப் பதிவுசெய்தார் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!
செலவுகளுக்கு ஏற்ப மக்களுக்கு பயன்களும் கிடைக்க வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!