உதிர்க்கின்ற வாக்குகள் ஒவ்வொன்றும் சத்தியமானவை: மன்னாரில் அமைச்சர் தேவா வாக்குறுதி!

Friday, July 10th, 2020

சொல்லுகின்ற வாக்குகள் ஒவ்வொன்றும் அரசியல் நோக்கங் கொண்ட கருத்துக்கள் இல்லை எனத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தன்னால் தெரிவிக்கப்படுகின்ற ஒவ்வொரு கருத்துக்களும் சத்தியமானவை எனவும் தன்னுடைய ஆழ்மனதின் விருப்பங்களும் தெரிவித்தார்.

மன்னார், சிலாவத்துறை சவேரியர்புரம் பிரசேத்தில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இதனைத் தெரிவித்தார்.

மேலும், ஆயுதப் போராட்டத்தின் ஆரம்ப கால போராளிகளில் ஒருவர் என்ற வகையில், போராட்டம் ஏற்படுத்திய அழிவுகளுக்கு தார்மீக பொறுப்பை ஏற்றுக்
கொண்டு, அந்த அழிவுகளுக்கு பரிகாரம் காண்பதற்காகவே அரசியலில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

எனவே, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் சிந்தித்து, ஈ.பி.டி.பி. கட்சியின் கரங்களை வலுப்படுத்துவார்களாயின் எதிர்பார்ப்புக்கள் அனைத்தையும் ஒருசில வருடங்களுக்குள் தீர்த்து வைப்பதற்கான பொறிமுறை தன்னிடம் இருப்பதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

வடக்கில் பாடசாலைகள் புனரமைப்பிற்கு இந்திய உதவி வரவேற்கத்தக்கது! நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவான...
வாக்குப்பலத்தை கொண்டு வளமான எதிர்காலத்தை உருவாக்குங்கள் - உடையார்கட்டில் டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!
இறந்த உறவுகளுக்காக நினைவேந்தும் உரிமையை எவரும் தடுப்பதற்கில்லை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!