இவ்வருட இறுதிக்குள் வளமான வாழ்வாதாரத்தை உருவாக்கித்தர நடவடிக்கை – தேவன்பிட்டி மக்களிடம் அமைச்சர் டக்ளஸ் உறுதி!

Saturday, June 19th, 2021

தேவன்பிட்டி மக்களுக்கான வளமான வாழ்வாதாரத்தினை இந்த வருட இறுதிக்குள் ஏற்படுத்தித் தருவதாக உறுதியளித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடலட்டை பண்ணைகளை அமைக்க விரும்புகின்றவர்கள் ஒரு மாத காலத்தினுள் அமைத்துக் கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

மன்னார், தேவன்பிட்டி கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் எதிர்பார்ப்புக்கள் தொடர்பான கலந்துரையாடலின் போதே, கடற்றொழில் அமைச்சர் மேற்குறித்தவாறு தெரிவித்துள்ளார்.

இறுக்கமான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி நடைபெற்ற குறித்த கலந்துரையாடலில் கருத்துக்களை முன்வைத்த பிரதேச மக்கள், ஏற்றுமதி நோக்கத்திலான நண்டு, கணவாய் போன்ற தொழிலினை பெருமளவில் மேற்கொண்டு வருவதாகவும், அதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதனால், மாற்றுத் தொழிலுக்கான மீன் வலைகளைப் பெற்றுத் தருமாறு கோரிக்கை முன்வைத்தனர்.

அதைவிட, சுமார் 65 பேர் கடலட்டைப் பண்ணைகளை அமைப்பதற்கு ஆர்வமாக இருப்பதாவும், அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு தருமாறும் கேட்டுக் கொண்டனர்.

அதேபோன்று பல்வேறு அடிப்படை தேவைகள் தொடர்பான கோரிக்கைகளும் பிரதேச மக்களினால் முன்வைக்கப்படடது.

இந்நிலையிலேயே, தற்போதைய அரசியல், பொருளாதார சவால்கள் தொடர்பாக எடுத்துக்கூறிய கடற்றொழில் அமைச்சர், மக்களுக்கான வாழ்வாதாரத்தினை ஏற்படுத்தித் தருவதாகவும் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே

மன்னார், தேவன்பிட்டி கிராமத்தில் சங்கு மற்றும் மட்டி பதனிடும் தொழில் நிலையத்தினை உருவாக்கித் தருமாறு  பிரதேச மாதர் அமைப்பினால்  கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டு்ள்து.

நாரா எனப்படும் தேசிய நீரியல் வள ஆராய்ச்சி நிறுவனத்தினால் குறித்த பதனிடும் தொழில் தொடர்பான ஒரு நாள் பயிற்சி வழங்கப்பட்டுள்ள நிலையில், தேவையான வளங்கயைும் உபகரணங்களையும் பெற்றுத் தருமாறு வேண்டுகோள் முன்வைக்கப்பட்டுள்ளது.

தேவன்பிட்டி கிராமத்தில் சுமார் 52 பெண் தலைமைத்தவ குடும்பங்கள் வாழ்ந்து   வருகின்ற நிலையில், அவர்களுக்கான வாழ்வாதாரம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்த மாதர் அமைப்பின் பிரதிநிதிகள், ஏனைய குடும்ப பெண்களும் பொருளாதார நன்மைகளை பெற்றுக்கொள்ளும் வகையில் குறித்த  திட்டம் அமைய வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

Related posts:

முப்படைகளுக்குமான ஆளணியின்போது இன விகிதாசாரம் பேணப்பட வேண்டும் -  நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வல...
வடக்கின் பாரிய நிதி மோசடிகளுக்குப் பிள்ளையார் சுழி போட்டது "சப்றா" நிறுவனமே - நாடாளுமன்றில...
அரசியல் அதிகாரங்கள் எம்மிடம் இருந்தபோது மக்களுக்காக நாம் சாதித்துக் காட்டியவை ஏராளம் – ஊடக சந்திப்பி...