அமைச்சர் டக்ளஸ் அதிரடி நடவடிக்கை – சமூக சீர்கேடுகளை கட்டுப்படுத்த விசேட குழு!
Friday, November 4th, 2022கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகரித்துள்ள போதைப் பொருள் பாவனை, சிறுவர் துஸ்பிரயோகம் உட்பட சமூக சீர்கேடுகளை கட்டுப்படுத்துவதற்கு, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கிய ஆலோசனையின் அடிப்படையில்,
விசேட குழு ஒன்றினை, உருவாக்கி அவற்றைக் கட்டுப்படுத்தற்கான வேலைத் திட்டங்களை முன்னெடுப்பதற்கு கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று(04.11.2022) நடைபெற்ற கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் அமைக்கப்படவுள்ள குறித்த குழு, போதைப்பொருள் பாவனை, பாலியல் துஷ்பிரயோகம், இளவயது கர்ப்பம், குடும்ப வன்முறை, தற்கொலைகள் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் செயற்படவுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தின் உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கு தொடர்பாக மாவட்டத்திற்கான பொறிமுறையை உருவாக்குவதற்காகன கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பங்குபற்றலுடன் நடைபெற்றது.
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், உணவுப் பாதுகாப்பினையும் போஷாக்கினையும் உறுதிப்படுத்தும் வகையில் விவசாய நடவடிக்கைகளை ஊக்குவிப்பது மற்றும் விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்களுக்கு தீர்வு காணுவது தொடர்பாக ஆராயப்படடது.
அதனடிப்படையில், வன பாதுகாப்பு மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களம் போன்றவற்றினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பாகவும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டிருந்நமை குறிப்பிடத்தக்கதது.
- 04.11.2022
Related posts:
|
|