அமைச்சர் டக்ளஸின் கௌதாரிமுனை விஜயத்தின் எதிரொலி – பூநகரி கௌதாரிமுனை நாளாந்த பேருந்து சேவை அதிகரிப்பு!

Wednesday, July 14th, 2021

பூநகரி கௌதாரிமுனைக்கு இன்று(14.07.2021) விஜயம் மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ்  தேவானந்தா வழங்கிய பரிந்துரை காரணமாக கௌதாரிமுனைக்கான நாளாந்த பேருந்து சேவை அதிகரிக்கப்பட்டு்ள்ளது.

இதுவரை காலமும் பூநகரியில் இருந்து கௌதாரிமுனைக்கு இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான  பேருந்து காலை மற்றும் மாலை என இரண்டு சேவைகளை வழங்கி வந்தது.

இதனால், கௌதாரிமுனை மககள் பல்வேறு போக்குவரத்து அசௌகரியங்களை எதிர்கொண்டு வந்தனர்.

இதுதொடர்பாக, பிரதேச மக்களினால் கடற்றொழில் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

உடனடியாக இலங்கை போக்குவரத்து சபையின் வட பிராந்திய முகாமையாளர் குணபாலசிங்கத்துடன் தொடர்பு கொண்ட அமைச்சர் டக்ளஸ் வோனந்தா, கௌதாரிமுனைக்கான பகல் சேவை ஒன்றினை வழங்குவதற்கு மேற்கொண்ட பரிந்துரைக்கு அமைய, நாளை தொடக்கம் பூநகரி மற்றும் கௌதாரிமுனைக்கு இடையில் பகல் பேருந்து சேவை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

00

Related posts: