அந்நியச் செலாவணி ஈட்டலுக்கான வழிவகைகள் இறுக மூடப்பட்டு கிடக்கின்றது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Thursday, May 23rd, 2019

இந்த நாட்டின் எதிர்கால எழுச்சியினை பொருளாதார அடிப்படையில் கொண்டு கட்டியெழுப்புகின்றபோது, மிகவும் கடுமையான உழைப்பினை நேர்மையான தன்மையுடன் தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டியதன் அவசியமே முன் நிற்கின்றது என்றே கூற வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

(நாடாளுமன்றில் நடைபெற்ற 2017ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணி சட்டத்தின் கீழான கட்டளை மற்றும் ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழான பிரேரணைகள் தொடர்பிலான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

அந்நியச் செலாவணி ஈட்டலுக்கான வழிவகைகள் ஏற்கனவே விரிவாக்கம் பெறாது இருந்து வந்துள்ள நிலையிலேயே, கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி தற்கொலைத் தாக்குதல் இடம்பெற்றதன் பின்னர், விரிவாக்கம் பெற வேண்டியிருந்த அந்த வழிவகைகளும் இன்று இறுக மூடப்பட்டு கிடக்கின்ற ஒரு நிலை ஏற்பட்டள்ளது.

எனவே, ஒரு பக்கம் நாட்டிற்கான அந்நியச் செலாவணிக்குரிய மார்க்கங்களை பலப்படுத்த வேண்டிய அதே நேரம், பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம் என்பதும் மறு பக்கத்தில் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நாட்டு நிலைமையில், பொருளாதார நெருக்கடியின் சுமையினை ஏழை மக்கள் மீதும், தொழிலாள மக்கள் மீதும் திணிக்காது இருகக் கூடிய நிலைமைகள் இங்கே தோற்றுவிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன்.

பொளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு தற்போது வாய்ப்புகள் குறைவாகவுள்ள நிலையில், பயங்கராவதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் என்கின்ற மகுடத்தை வைத்துக் கொண்டு, சமூக மற்றும் வாழ்க்கைகக்குரிய மக்களது தேவைகளின் மீது ஒடுக்குதல்கள் மேற்கொள்ளப்படாதிருத்தல் வேண்டும்.

தற்போதைய பயங்கரவாதத்தின் ஒருங்கிணைந்த அழுத்தமமானது, பொருளாதாரத்தை சீர்குலைப்பதும், பொருளாதாரத்தின் வளர்ச்சி வேகத்தைக் குறைப்பதுமாகும் என்றே சுட்டிக்காட்டப்படுகின்றது.

இது, செலுத்த வேண்டிய நிலுவைகள், அந்நிய நிதி நிலைமை மற்றும் நிதி மானியங்கள் தொடர்பில் பாதிப்பு மிக்க அழுத்தங்களைப் பிரயோகிக்கும் என்பதுடன், இதன் ஊடாக வெளிவாரி பாதுகாப்பற்றத் தன்மை அதிகரிப்பதானது இதன் மிகப் பாரிய பாதிப்பாக அமையும் என்றும் சுட்டிக்காட்டப்படுவதை அவதானத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

Related posts:

சமூகவிரோத செயல்களைக் கட்டுப்படுத்த மக்களின் விழிப்புணர்வு அவசியம் - டக்ளஸ் தேவானந்தா!
தியத்தலாவை பேருந்து அனர்த்தம் கண்டிக்கத்தக்கது! பொறுப்புடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தை நாடாளுமன்றத...
புரெவிப் புயலில் பாதிக்கப்பட்ட கடற்றொழில் உபகரணங்களுக்கு விரைவில் நஸ்டஈடு - அதிகாரிகள் இறுதிக் கட்ட ...

மக்களுக்காக அரசாங்கம் வகுக்கின்ற திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம...
முரண்பாடுகளுக்கு தீர்வுகாண விரைவில் கடற்றொழில்சார் தேசியக் கொள்கை - நாடாளுமன்றில் அமைச்சர் டக்ளஸ் ...
நீர் வேளாண்மையை மேம்படுத்தும் மாபெரும் கருத்திட்டம் வடமராட்சி மண்டான் களப்பு பகுதியில் அமைச்சர் டக்ள...