119 அவசர இலக்கத்தைத் தவறாகப் பயன்படுத் வேண்டாம் – பொலிசார் பொதுமக்களிடம் வேண்டுகோள்!
Tuesday, June 24th, 2025
119 எனும் அவசர இலக்கத்தைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு காவல்துறை பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதன்படி, குறித்த துரித இலக்க மையத்தைத் தவறாகப் பயன்படுத்திய சம்பவங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
தேவையான முறைப்பாட்டுக்கு மேலதிகமாக, போலியான முறைப்பாடுகள் மற்றும் ஏனைய அவசர சேவைகளுக்குப் பரிந்துரைக்கப்பட வேண்டிய முறைப்பாடுகளும் இந்த துரித இலக்கம் ஊடாக பெறப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளது.
ஏனைய சேவைகள் மூலம் குறித்த தேவையை பூர்த்தி செய்ய முடியும் என்ற போதிலும், கையூட்டல், காணி, நிதி தகராறுகள் போன்ற வழக்குகள் தொடர்பான முறைப்பாடுகளும் இந்த அவசர அழைப்பு மையத்திற்குக் கிடைப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இதன்படி, அவசர தேவைகளின்போது 119 அவசர அழைப்பு மையத்தைத் தொடர்பு கொள்ளும் திறன் மிகக் குறைவாகக் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவ்வாறான உண்மைக்குப் புறம்பான முறைப்பாடுகள் முன்வைக்கப்படுவது தொடர்பில் நீதிமன்றத்திற்குத் தெரிவிக்கவும், சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கவும் காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
000
Related posts: