Warning: session_start(): open(/opt/alt/php73/var/lib/php/session/sess_7346c863fff858c0da0c31a1b714422a, O_RDWR) failed: Disk quota exceeded (122) in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/functions.php on line 1285

Warning: session_start(): Failed to read session data: files (path: /opt/alt/php73/var/lib/php/session) in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/functions.php on line 1285
ஸ்ரான்லி வீதி ஞான வைரவர் கோவில் வைகாசி உற்சவம் இன்று - சிறப்பு பூசை வழிபாட்டில் ஈடுபட்ட டக்ளஸ் தேவானந்தா! - EPDP NEWS

ஸ்ரான்லி வீதி ஞான வைரவர் கோவில் வைகாசி உற்சவம் இன்று – சிறப்பு பூசை வழிபாட்டில் ஈடுபட்ட டக்ளஸ் தேவானந்தா!

Thursday, June 4th, 2026


……
யாழ்ப்பாணம் – ஸ்ரான்லி வீதி – சிறாம்பியடியில் அமைந்துள்ள அருள்மிகு ஞான வைரவ பெருமான் ஆலயத்தின் வருடாந்த வைகாசி உத்தரபட்ஷ மணவாளக்கோல சாந்தீக அலங்கார உற்சவ பூசை வழிபாடுகள் பக்திபூர்வமாக இன்று (4) நடைபெற்றன.

இந்த பூசை வழிபாட்டில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கலந்துகொண்டு சிறப்பு இறைவழிபாடுகளில் ஈடுபட்டார்.

​ஆலய உற்சவத்தை முன்னிட்டு இன்று முற்பகல் 10.00 மணியளவில், 108 சங்காபிஷேகமும், அதனைத் தொடர்ந்து வைரவ பெருமானுக்கு விசேட சிறப்புமிக்க அலங்கார பூஜைகளும் மிகச் சிறப்பாக நடைபெற்றன.

இதில் பெருமளவிலான பக்தர்கள் கலந்துகொண்டு திருவருள் பெற்றனர்.

​தொடர்ந்து மாலை 6.00 மணியளவில், எம்பெருமான் அலங்கார இரதத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இந்த இரத பவனி ஆலய வெளிவீதியுலா ஸ்ரான்லி வீதி – மணிக்கூட்டு வீதி – நாவலர் வீதி ஊடாகப் பயணித்த இறுதியாக மீண்டும் ஸ்ரான்லி வீதி வழியாக ஆலயத்தை வந்தடைந்தது.

இந்தத் திருவிழா ஏற்பாடுகளை ஆலயப் பரிபாலன சபையினரும், அப்பகுதி மக்களும் இணைந்து மிகச் சிறப்பாகச் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: