வெளிநாட்டு சுற்றுலாவிகளை ஏற்றிச் சென்ற முச்சக்கரவண்டி விபத்து – மூவர் வைத்தியசாலையில் அனுமதி!

Thursday, March 12th, 2026


……
வெளிநாட்டு சுற்றுலாவிகளை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டியும் காரும் மோதி விபத்துக்குள்ளானதில் இரு சுற்றுளாவிகள் உள்ளிட்ட மூவர் காயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் வேலணை மண்கும்பான் பகுதியில் இன்று (12) இடம்பெற்றுள்ளது..

இது குறித்து மேலும் தெரியருகையில் –

மண்கும்பான் பிள்ளையார் கோயிலுக்கு அண்மையில்  காரும் குறித்த முச்சக்கர வண்டியும் முந்திச் செல்ல முற்பட்ட வேளை இவ்விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவத்தில் பிரான்ஸ் நாட்டிலிருந்து சுற்றுலாவுக்கு வருகை தந்திருந்த ஆண் மற்றும் பெண் ஆகிய இருவருடன் முச்சக்கர வண்டியின் சாரதியும் காயமடைந்துள்ளனர்.

வெளிநாட்டவரான குறித்த ஆண் யாழ் போதனாவில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பெண்ணுகு கை விரலில் முறிவு ஏற்பட்ட நிலையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் தெரியவருகின்றது

இதேநேரம் முச்சக்கர வண்டியின் சாரதி தலை கை மற்றும் முதுகுப் பகுதிகளில் கடும் காயங்களுற்ற நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இதனிடையே கார் சாரதியும் ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றார்.

குறித்த விபத்து தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

Related posts: