வான் வெளியை முழுமையாக மூடிய பாகிஸ்தான்!

Saturday, May 10th, 2025

ஆளில்லா விமானத் தாக்குதல்களுக்கு மத்தியில் வணிக விமானங்களை பாகிஸ்தான் கேடயங்களாகப் பயன்படுத்துவதாக இந்தியா குற்றம் சாட்டிய சில மணித்தியாலங்களில், பாகிஸ்தான் அனைத்து விமானப் போக்குவரத்துக்குமான தமது வான்வெளியை மூடியுள்ளது.

நாடுகளுக்கு இடையே அதிகரித்த பதற்றங்களுக்கு மத்தியில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது தனது வான்வெளியை திறந்து வைத்திருப்பதன் மூலம் பாகிஸ்தான் சர்வதேச விமானப் போக்குவரத்துக்கு ஆபத்தை விளைவிப்பதாக இந்தியா குற்றம் சுமத்தியிருந்தது.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சர்வதேச எல்லைக்கு அருகில் பயணித்துக் கொண்டிருக்கும் சர்வதேச விமானங்கள் உட்பட சந்தேகத்திற்கு இடமில்லாத சிவில் விமானங்களுக்கு இது பாதுகாப்பானது அல்ல என்று இந்தியா தெரிவித்திருந்தது

000

Related posts: