வாகன இறக்குமதிக்காக சுமார் 450 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கடன் கடிதங்கள் ஏற்கனவே திறக்கப்பட்டுள்ளன – மத்திய வங்கி ஆளுநர் நந்தலால்!
Friday, May 23rd, 2025
வாகன இறக்குமதிக்காக சுமார் 450 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கடன் கடிதங்கள் ஏற்கனவே திறக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை மத்திய வங்கியில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறினார்.
சுமார் 200 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான வாகனங்கள் ஏற்கனவே நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது கூறினார்.
மேலும், 2025 ஆம் ஆண்டில் வாகன இறக்குமதிக்காக 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை ஒதுக்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
00
Related posts:
உயர் தரப் பரீட்சை குறித்து இதுவரை 40 முறைப்பாடுகள்!
தேசிய பூங்காக்களை வழமைபோல் பார்வையிட அனுமதி!
இலங்கையில் மாலைதீவு கலாசார நிலையமொன்றை அமைக்க நடவடிக்கை – அமைச்சரவையும் அனுமதி!
|
|
|
நிர்ணய விலையில் பொருட்களை விற்று சட்ட நடவடிக்கைகளைத் தவிர்க்கவும் யாழ்.வணிகர் கழகம் அறிவுறுத்து!
வரவு செலவுத் திட்டத்தின் 10 ஆம் நாள் குழுநிலை விவாதம் இன்று - நகர அபிவிருத்தி, வீடமைப்பு, தொழிலாளர் ...
5 மணித்தியால மின் தடை - 600 கோடிக்கும் அதிகமான நேரடி பொருளாதார இழப்பு - மின்சக்தி அமைச்சரும் செயலாளர...


