ரஷ்யாவுக்கு அருகே அதிசக்தி வாய்ந்த நில அதிர்வு – பல நாடுகளுக்கும் ஆழிப்பேரலை எச்சரிக்கை!

ரஷ்யாவுக்கு அருகே ஏற்பட்ட நிலஅதிர்வையடுத்து அங்கு ஆழிப்பேரலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் 8.7 மெக்னிடியூட் அளவில் இந்த நிலஅதிர்வு பதிவாகியுள்ளதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆழிப்பேரலை எச்சரிக்கையையடுத்து கரையோரங்களில் வசிக்கும் மக்களைக் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே ஜப்பானின் கடலோரப் பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள ஆழிப்பேரலை எச்சரிக்கையும் அமுலில் உள்ளது.
ஹவாய் தீவுகள், அமெரிக்காவின் கலிபோர்னியா,அலஸ்காவின் அலூடியன் (Aleutian) தீவுகளின் சில பகுதிகளுக்கும், ஜப்பானுக்கும் ஆழிப்பேரலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
Related posts:
லொத்தர் சபைகளை வெளிவிவகார அமைச்சுக்கு இணைப்பது தொடர்வில் சிக்கல் – பந்துல
2024 ஆம் கல்வியாண்டுக்கான முதலாம் தவணையின் முதலாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் பெப்ரவரி 19 ஆம் திகதி ஆரம...
நாகர்கோவில் மேற்கு பகுதியில் தீயில் எரிந்த வீடு - விசமிகளால் தீ வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கு...
|
|