யாழ். மாநகர சபையின் 23 ஆம் வட்டாரத்திற்கான அலுவலகம் குருநகர் பகுதியில் திறந்துவைப்பு!
Friday, April 25th, 2025
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ். மாநகர சபையின் 23 ஆம் வட்டாரத்திற்கான அலுவலகம் நேற்றையதினம் (24) குருநகர் பகுதியில் திறந்து வைக்கப்பட்டது.
கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தாவினால் குறித்த அலுவலகம் நாடா வெட்டி வைக்கப்பட்டது.
நிகழ்வில், தொழிலதிபர் ஞானப்பிரகாசம் சுலக்சன், குறித்த வட்டாரத்தில் போட்டியிடும் டிலான் சுரஞ்சன், சக வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதனிடையே நல்லூர் பிரதேச சபைக்கான 12 ஆம் வட்டார வேட்பாளர் அஶ்ரீ கணேஸ் ஏற்பாடு செய்யப்பட்ட பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்ட செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மற்றும் மற்றும் அரசியல் நிலைரங்கள் தொடர்பாக கலந்துரையாடினார்.
இக்கூட்டத்தில், 11 ஆம் வட்டாரத்தில் போட்டியிடும் யோகராசா யோகசீலன் மற்றும் அலெக்ஸ்சாண்டர் கிருஸ்ணவேணி 12 வட்டார வேட்பாளர் சுப்பிரமணியம் சுசீந்திரன் ஆகியோரும் பிரதேச மக்கள் என பலர் கலந்து கொண்டனர். –
அத்துடன் யாழ் மாநகர சபைக்கான தேர்தலில் 03ஆம் வட்டாரத்தில் போட்டியிடும் வட்டார வேட்பாளர் விமலேஸ்வரி அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்டார்.
000
Related posts:
|
|
|


