யாழ் மாநகர சபையின் அநாகரீகமான செயற்பாடு – கல்லூண்டாய் பகுதியில் கழிவுப் பொருட்கள் எரிக்கப்படுகின்றமை தொடர்பில் மக்கள் குற்றச்சாட்டு!
Saturday, June 21st, 2025
மானிப்பாய் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட கல்லூண்டாய் பகுதியில் யாழ்ப்பாணம் மாநகர சபையினர் கழிவுப் பொருட்களை சேகரித்து வருகின்றனர்.
குறித்த கழிவு சேகரிக்கும் பகுதிக்கு தொடர்ச்சியாக தீ வைத்து வருவதால் வீதியால் செல்லும் பயணிகளும், அண்டியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களும் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
அந்தவகையில் நேற்றையதினம் குப்பை மேட்டுக்கு தீ வைத்ததால் அதன்மூலம் வெளியான புகை வீதியெங்தும் பரவியதால் வீதியால் செல்லும் மக்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
மாநகரசபையின் இவ்வாறான அநாகரீகமான செயற்பாடுகள் குறித்து பல தடவைகள் செய்திகள் வெளியாகியபோதும் அவர்கள் தொடர்ந்தும் இவ்வாறு செய்வது மக்களை பற்றிய அக்கறை இல்லாத தன்மையை எடுத்துக் காட்டுகின்றது என மக்கள் தெரிவித்தனர்.
000
Related posts:
இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா – இன்றும் 11 பேர் அடையாளம் காணப்பட்டனர்!
கொடிகாமம் வர்த்தகர்கள் நால்வர் உட்பட வடக்கில் மேலும் 14 பேருக்கு கோவிட் தொற்று - மாகாண சுகாதார சேவைக...
கொரோனா தொடர்பில் எந்த அறிகுறிகளும் காட்டாத பட்சத்தில், அவர் தனிமைப்படுத்தலின்றி தங்கள் கடமைகளைச் செய...
|
|
|


