யாழ். பல்கலையின் புதிய வேந்தராக பேராசிரியர் குமாரவடிவேல் நியமனம்!

……
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக பேராசிரியர் இ. குமாரவடிவேல் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.
பல்கலைக்கழகச் சட்டத்தின் 32 ஆம் பிரிவின் படி, அடுத்துவரும் ஐந்து ஆண்டுகளுக்கு அப்பதவிக்கான நியமனம் ஜனாதிபதியால் வழங்கப்பட்டுள்ளது.
இவருக்கான நியமனக் கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி என். எஸ். குமநாயக்கவினால் வழங்கப்பட்டுள்ளது.
யாழ். பல்கலைக்கழகத்தின் முன்னாள் வேந்தர் வாழ்நாள் பேராசிரியர் சி. பத்மநாதனின் பதவிக்காலம் கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்தது.
இந்த நிலையில் புதிய வேந்தராக வாழ்நாள் பேராசிரியர் இ. குமாரவடிவேல் கடந்த மாதம் 27 ஆம் திகதி முதல் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
பொப்பிசை பாடகர் மனோகரனின் இழப்பு தமிழ்க் கலையுலகிற்கு பேரிழப்பு - டக்ளஸ் தேவானந்தா இரங்கல்
10 பாடங்களைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு 21 நாள்கள் முன்சேவைப் பயிற்சி !
சட்டத்துக்கு புறம்பாக சாராயம் விற்பனை செய்த பெண்ணொருவர் பொலிஸாரால் கைது!
|
|