யாழில் மக்களின் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள நடைபாதை வியாபார நிலையங்களை அகற்றும் பணிகள் முன்னெடுப்பு!

Friday, July 25th, 2025

யாழ்ப்பாணத்தில் மக்களின் போக்குவரத்துக்கு இடையூறாக அமைந்துள்ள நடைபாதை வியாபார நிலையங்களை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதன் முதற்கட்டமாக, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின், முன்பகுதியில் அமைந்திருக்கும் நடைபாதை வியாபார நிலையங்களை அகற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக நல்லூர் பிரதேச சபை தெரிவித்துள்ளது.

அதற்கமைய, நடைபாதை வியாபார நிலையங்களை எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னர் அகற்றுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வியாபார நிலையங்களை அகற்றாத பட்சத்தில், அனைத்து நடைபாதை வியாபார நிலையங்களின் பொருட்களும் பிரதேச சபையால் பறிமுதல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதேவேளை, நடைபாதையில் வாகனங்களை நிறுத்துவதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.  அதனை மீறுவோருக்கு எதிராக, போக்குவரத்து காவல்துறையினூடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

000

Related posts: