மூத்த ஊடகவியலாளர் பாரதியின் இறுதி கிரியைகள் வியாழன்!

Tuesday, February 11th, 2025

மூத்த ஊடகவியலாளர் இராஜநாயகம் பாரதியின் இறுதி சடங்கு, நாளைமறுதினம் வியாழக்கிழமை  13 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.

தமிழ் ஊடக பரப்பில் 40 வருடங்களுக்கு மேல் ஊடக அனுபவத்தை கொண்ட மூத்த ஊடகவியலாளர் இராஜநாயகம் பாரதி உடல் நலகுறைவு காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் காலமானார்.

யாழ்ப்பாணம் – பலாலி வீதியில், திருநெல்வேலியில் (திண்ணை ஹோட்டலுக்கு முன்பாக) அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் புகழுடல் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

நாளைமறுதினம் வியாழக்கிழமை 13 ஆம் திகதி காலை இறுதி கிரியைகள் மற்றும் அஞ்சலி  அஞ்சலி நிகழ்வுகள், உரைகள் இடம்பெற்று, புகழுடல் தகன கிரியைகளுக்காக மதியம் 1 மணியளவில் கொக்குவில் இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்படவுள்ளது என குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.

Related posts: