மின்சார கட்டணத்தைக் 20 சதவீதம் குறைப்பதற்கான வழி இருக்கும்போது 18.3 சதவீத  கட்டணத்தை அதிகரிக்க முன்மொழியப்பட்டதேன் –  மின்சார நுகர்வோர் சங்கம் கேள்வி!

Tuesday, May 20th, 2025

இலங்கை மின்சார சபை 18.3 சதவீத மின்சார கட்டணத்தை அதிகரிக்க முன்மொழிந்துள்ள போதிலும், மின்சார கட்டணத்தைக் குறைந்தபட்சம் 20 சதவீதம் குறைப்பதற்கான வழி இருப்பதாக மின்சார நுகர்வோர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சஞ்சீவ தம்மிக,  தெரிவித்துள்ளார்.

மின்சார சபை கடந்த 2023 ஆம் ஆண்டு 57 பில்லியன் ரூபாவையும், 2024ஆம் ஆண்டு 144 பில்லியன் ரூபாவையும் இலாபமாக ஈட்டியது.

இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் 22 சதவீத கட்டணக் குறைப்பைத் தொடர்ந்து, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, மின்சார சபையின் 200 பில்லியன் ரூபாவில் இருந்து 51 பில்லியன் ரூபாவை ஆறு மாத காலத்திற்குப் பயன்படுத்த அனுமதித்தது.

எனினும் 18 பில்லியன் ரூபாவை மாத்திரமே மின்சாரசபை பயன்படுத்திய போதிலும் சுமார் 183 பில்லியன் ரூபாய் மீதமுள்ளது.

இந்நிலையில் எதற்காக மின்சார கட்டணத்தை அதிகரிக்க வேண்டும்? என மின்சார நுகர்வோர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சஞ்சீவ தம்மிக கேள்வி எழுப்பியுள்ளார்.

000

Related posts: