மண் மாயியாக்களால் மக்கள் சேவையை ஒன்றும் செய்துவிட முடியாது – பூநகரி பிரதேச சபையின் தவிசாளர்!

Monday, May 4th, 2026


…….
பூநகரி பிரதேச சபையினால் நியாயமான விலையில் பொதுமக்களுக்கு மண் விநியோகிக்கும் பணியினை தடுப்பதற்கு மண் மாயியாக்களுக்கும், அவர்களிடம் கையூட்டுப்பெற்று வாழ்பவர்களும்  முற்பட்டிருக்கின்ற போதிலும் அம்முயற்சியில் அவர்கள் வெற்றிபெறப்போவதில்லைஎன தெரிவித்துள்ள
பூநகரி பிரதேச சபையின் தவிசாளர் திட்டமிட்ட வகையிலான சமூக ஊடகங்களிலான சேறடிப்புக்களில் ஈடுபடும் நபர்கள் மண் மாபியாக்களுடனான தொடர்புகள் பற்றி ஆராய வேண்டியுமுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சட்டவிராதமான முறையில் மணல் ஏற்றிச் சென்ற பூநகரி பிரதேச சபையின் உழவு  இயந்திரம் ஒன்று பொலிசாரால் பிடிக்கப்பட்டதாக வெளியான செய்து குறித்து இவ்வாறு கூறியிருக்கும் அவர் மேலும் கூறுகையில்

பூநகரி பிரதேச சபையிலிருந்து வட மாகாண ஆளுநரின் ஆலோசனையின் பெயரில் பொதுமக்களுக்கு நியாயமான விலையில் கட்டட வேலைக்கான மண்ணினை விநியோகித்து வருகின்றது.

அவ்வகையில் கடந்த சில மாதங்களில் யாழ்.மாவட்டத்திற்கு 224 டிறைக்ரர் மண் விநியோகிக்கபபட்டுள்;ளதுடன், பூநகரி பிரதேச சபை எல்லைக்குள் 54 டிறைக்ரர் லோட் மண்ணும் இதுவரை விநியோகிக்கப்பட்டுள்ளது.

மீதியாக களஞ்சியத்திலுள்ள மண் தொடர்ந்தும் வீட்டுத்திட்ட பயனாளிகள் மற்றும் அடிப்படை வசதிகள் உருவாக்குதல், வீடுதிருத்தம் உள்ளிட்ட பயனாளிகளுக்கு  டிறைக்ரர் லோட்  ஒன்று ரூபா 10000.00 என்ற அடிப்படையில் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

வடமாகாண ஆளுநர்  தலைமையில் 16.03.2026 ஆம் திகதி நடைபெற்ற உயர் மட்ட கூட்ட தீர்மானத்தின் பிரகாரம் பொதுமக்களின் சிறிய தேவைக்கான மணலை உள்;ராட்சி மன்றத்தில் பெற்றுக்கொண்ட பற்றுச்சீட்டுடன் பொலிசாரின் இடையூறின்றி எடுத்துச்செல்ல முடியும் என அறியத்தரப்பட்டிருந்நது.

அதன் பிரகாரம் உள்;ர் மக்களுக்கான மண் விநியோகிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த 02.05.2026 ஆம் திகதி விசேட பொலிஸ் அதிரடிப்படையினால் பல்லவராயன்கட்டு மண் களஞ்சியத்திலிருந்து வாடியடி நெற்புலவு முன்பள்ளி வீதி நிர்மாணிப்புக்கான மண் ஏற்றி வரப்பட்டபோது வாகனமும்> சாரதியும் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர்.
உள்;ர் சனசமூக நிலையம் ஒன்றினூடாக முன்னெடுக்கப்படும் வீதி வேலைக்காக மண் எடுத்துவரப்பட்ட வேளையே வழித்தட அனுமதியற்றதாக தெரிவித்து சாரதி கைதுசெய்யப்பட்டதுடன் மண்ணினை ஏற்றும் பணியில் ஈடுபட்டிருந்த வீதித் தொழிலாளிகள் தாக்கப்பட்டும் இருந்தனர்.

வடமாகாண ஆளுநர் மற்றும் உயர்மட்ட காவல்த்துறை அதிகாரிகள் சகிதம் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு மாறாக நீதி மன்றத்தில் வழித்தட அனுமதியின்றி மண் எடுத்துச்சென்றதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.

மறுபுறம் பெரும் சிரமங்களின் மத்தியில் புனரமைக்கப்பட்ட கெளதாரிமுனை வெட்டுக்காடு வீதி இரவிரவாக மண் கடத்தல் காரர்களின் அதிவேக பாதையாகியுள்ளது.

ஆனால் சங்குப்பிட்டி பாலத்தில் நிற்கும் காவல்துறைக்கோ, அதிரடிப் படைக்கோ ஏதும் தெரியாத ஞான நிலை காணப்படுகிறது.

சேறடிப்புக்கள் தடைகளினை தாண்டியதாக மக்களிற்கான சேவைகளை சபை தொடர்ந்தும் ஆற்றியே வரும்.

பூநகரி பிரதேச சபையில் பல்லவராயன்கட்டு மண் களஞ்சியம் மற்றும் சின்னப்பல்லவராயன்கட்டு பொதுமண்டப மண் களஞ்சியம் ஊடாக பொது மக்களுக்கான மண் விநியோகம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வரும் என்பதனை அறியத்தருகின்றேன்.

Related posts: