மணல்காடு பகுதியில் இருந்து கட்டுமரத்தில் கடற்றொழிலிற்கு சென்ற தொழிலாளி ஒருவர் கரை சேரவில்லை!

Thursday, June 26th, 2025

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, மணல்காடு பகுதியில் இருந்து அதிகாலை கட்டுமரத்தில் கடற்றொழிலிற்கு சென்ற தொழிலாளி ஒருவர் இதுவரை கரை சேரவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

அ.ஆனதாஸ் என்கின்ற 38 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு தொழிலுக்கு சென்ற நிலையில் கரை திரும்பவில்லை

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

இன்று அதிகாலை குறித்த மீனவர் மீன் பிடி தொழிலுக்காக சென்றுள்ளார். வழமையாக 9.00 மணியளவில் கரைசேரும் இவர் இதுவரை திரும்பி வராத நிலையில் உறவினர்கள் படகில் தேடிச் சென்றவேளை, அவர் பயணித்த கட்டுமரமானது கடலில் மிதந்து வந்துள்ளது.

கடலட்டை தொழிலில் ஈடுபடும் படகு மோதியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் மணல்காடு மீனவர்கள் தற்போது தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சம்பவம் தொடர்பாக மருதங்கேணி பொலிசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்‌.

000

Related posts:


தொழில் முயற்சியாளர்களுக்கு வங்கிகள் ஒத்துழைப்பு வழங்குவதன் மூலம் துரித பொருளாதார அபிவிருத்தியை அடையம...
அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் குறையும் - வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவிப்பு!
பிரச்சினைகளை யதார்த்தமாக அணுகி தீர்வு பெற்று தர முயல்வேன் - வடக்கு மாகாண ஆளுநர் பி எச் எம் சாள்ஸ் தெ...