பொலிஸ் மா அதிபருக்கு எதிராக உச்ச நீதிமன்றில் பொலிஸ் உயர் அதிகாரிகளினால் வழக்கு தாக்கல்!

Saturday, September 27th, 2025


…….
பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவிற்கு எதிராக உச்ச நீதிமன்றில் பொலிஸ் உயர் அதிகாரிகளினால் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

உதவி பொலிஸ் அத்தியட்சகர் பதவிக்கு நடத்தப்பட்ட ஆட்சேர்ப்பு தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம்சாட்டி இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

170 பேர் கொண்ட சிரேஸ்ட பொலிஸ் பரிசோதகர்கள் மற்றும் பொலிஸ் பரிசோதகர்கள் குழு உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுக்களை தாக்கல் செய்துள்ளது.

பொலிஸ் மா அதிபர், புதிதாக பதவி உயர்வு பெற்றுக்காண்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள் மற்றும் தேசிய பொலிஸ் ஆணைக்குழு உறுப்பினர்கள் ஆகியோர் இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

மனுதாரர்கள் சட்டத்தரணி மஞ்ஜுலா பாலசூரிய ஊடாக இந்த மனுக்களை தாக்கல் செய்துளள்னர்.

பரீட்சை முடிவின் அடிப்படையில் 45 பேருக்கு பதவி உயர்வு அளித்ததன் மூலம் தங்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளன என்று மனுதாரர்கள் கூறியுள்ளனர்.

பரீட்சைக்கான கேள்விகள் கசிந்ததாகவும், முடிவுகள் வெளியிடுவதில் திட்டமிட்ட தாமதம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் சேவை மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்பட்டதாகவும், இம்முறை கல்வித் தகுதிகளின் அடிப்படையில் மட்டுமே உயர்வு வழங்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் பரீட்சையின் போது பல்வேறு முறைகேடுகள் இடம்பெற்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

எனவே பரீட்சை முற்றிலும் செல்லாததாக அறிவிக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என மனுதாரர்கள் வலியுறுத்தியுள்ளனர். 

Related posts: