பேரிடர் மீட்பு ஆதரவை அவசரமாக இலங்கைக்கு அனுப்பிய பிரதமர் நரேந்திர மோடி!
Friday, November 28th, 2025
…..
இந்தியா ஓபரேஷன் சாகர் பந்துவின் கீழ், நிவாரணப் பொருட்கள் மற்றும் முக்கியமான பேரிடர் மீட்பு ஆதரவை அவசரமாக இலங்கைக்கு அனுப்பியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சூறாவளி பேரனர்த்தத்திற்கு உதவுமாறு இலங்கை அரசாங்கம் இந்தியாவிடம் கோரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில், இலங்கையில் வெள்ள நிவாரணப் பணிகளுக்கு இந்தியாவின் ஐஎன்எஸ் விக்ராந்த் ஹெலிகாப்டர்களை அனுப்ப உள்ளது.
மேலும், இது தொடர்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் இட்டுள்ள பதிவில்,
“டிட்வா சூறாவளியால் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த இலங்கை மக்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களின் பாதுகாப்பு, ஆறுதல் மற்றும் விரைவான மீட்சிக்காக நான் பிரார்த்திக்கிறேன்.
நமது நெருங்கிய கடல்சார் அண்டை நாடுகளுடன் ஒற்றுமையுடன், இந்தியா ஒபரேஷன் சாகர் பந்துவின் கீழ் நிவாரணப் பொருட்கள் மற்றும் முக்கியமான HADR ஆதரவை அவசரமாக அனுப்பியுள்ளது என்றுள்ளது.
Related posts:
|
|
|


