Warning: session_start(): open(/opt/alt/php73/var/lib/php/session/sess_4166d0309759de49c24daef1807c1800, O_RDWR) failed: Disk quota exceeded (122) in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/functions.php on line 1285

Warning: session_start(): Failed to read session data: files (path: /opt/alt/php73/var/lib/php/session) in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/functions.php on line 1285
புதிய கொள்கையின் ஊடாக ஆசிரியர் இடமாற்றம் -   அதிகாரிகளுக்கு ஆளுநர் அறிவுறுத்து! - EPDP NEWS

புதிய கொள்கையின் ஊடாக ஆசிரியர் இடமாற்றம் –   அதிகாரிகளுக்கு ஆளுநர் அறிவுறுத்து!

Thursday, April 30th, 2026


……
மாகாணம் முழுவதுமான ஆளணிப் பரம்பலைச் சீராக்கும் நோக்கில் புதிதாகத் தயாரிக்கப்பட்டுள்ள ஆசிரியர் இடமாற்றக் கொள்கை தொடர்பில் விசேட கவனம் செலுத்திய வடக்கின் ஆளுநர்
இக்கொள்கை தொடர்பில் ஆசிரியர் தொழிற்சங்கங்களுடன் விரைவில் கலந்துரையாடல்களை மேற்கொண்டு, அடுத்த ஆண்டுக்கான ஆசிரியர் இடமாற்றங்களைப் புதிய கொள்கையின் ஊடாகவே நடைமுறைப்படுத்த துரித நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு  அறிவுறுத்தியுள்ளார்.

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் ஓய்வூதியத்துக்கு விண்ணப்பிக்கும் வரை அவர்களது தனிப்பட்ட கோவைகளை இற்றைப்படுத்தாது நிலுவையில் வைத்திருக்கக் கூடாது எனவும், அவற்றை உரிய காலத்தில் இற்றைப்படுத்தி ஒழுங்குமுறைப்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

அதேவேளை, நிலுவையில் உள்ள விசாரணைகள் காரணமாக எவருக்கும் ஓய்வூதியம் தாமதமாகும் நிலை ஏற்படக்கூடாது எனவும், விசாரணைகளைத் துரிதமாக நிறைவு செய்ய வேண்டும் எனவும் ஆளுநர் திட்டவட்டமாகப் பணிப்புரை விடுத்தார்.

மேலும் நிர்வாகச் செயற்பாடுகளில் வலயக் கல்விப் பணிப்பாளர்களின் வகிபாகம் மிக முக்கியமானது எனச் சுட்டிக்காட்டிய ஆளுநர், அவர்கள் தற்துணிவுடன் முடிவுகளை எடுத்து உரியவாறு நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

அத்துடன், சிறப்பாகப் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களை ஒவ்வொரு வலயமும் அடையாளங்கண்டு கௌரவிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
0000

Related posts: