புதிய ஆண்டின் கல்வி நடவடிக்கைகளுக்காக அனைத்துப் பாடசாலைகளும் நாளை ஆரம்பம்!

Sunday, January 4th, 2026


…….
2026 ஆம் கல்வி ஆண்டின் முதல் தவணையின் முதற்கட்ட நடவடிக்கைகளுக்காக அனைத்துப் பாடசாலைகளும் நாளை (05) திறக்கப்படவுள்ளன. 
 
இதற்கமைய, அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் மற்றும் பிரிவெனாக்களில் நாளைமுதல் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 
 
2026 ஆம் கல்வி ஆண்டின் முதல் தவணை நடவடிக்கைகள், கடந்த டிசம்பர் 09 ஆம் திகதி வெளியிடப்பட்ட சுற்றுநிருபத்திற்கு அமைவாக முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
முன்பதாக சிங்கள மற்றும் தமிழ் மொழிமூலப் பாடசாலைகளுக்கான 2025 ஆம் கல்வி ஆண்டு கடந்த டிசம்பர் 22 ஆம் திகதியும், முஸ்லிம் பாடசாலைகளுக்கு டிசம்பர் 26 ஆம் திகதியும் நிறைவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
000

Related posts: