பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
Friday, October 10th, 2025
…..
பிலிப்பைன்ஸ் மிண்டனோ தீவில் அந்நாட்டு நேரப்படி இன்று காலை 9.43 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மிண்டனோ தீவின் மெனே நகர் அருகே கடலில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவில் 7.4 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. இதனால், அச்சமடைந்த மக்கள் அலறியடித்துக்கொண்டு வீதிகளில் தஞ்சமடைந்தனர்.
நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. 10 அடி வரை சுனாமி அலைகள் உருவாகலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
000
Related posts:
யாழில் ஒரு கோடியே முப்பது இலட்சம் ரூபா செலவில் அங்காடி விற்பனைக் கூடம்!
பொதுமக்களின் அமைதியை பாதுகாக்குமாறு ஆயுதம் தாங்கிய சகல படையினருக்கும் ஜனாதிபதி உத்தரவு!
போலித் தேசியவாதிகளின் காலச் சூழலுக்கு ஒத்துவராத சிந்தனைகளைத் தூக்கி எறிவோம் – சமூக அக்கறையாளர்கள் வ...
|
|
|


