பிலிப்பைன்சை மிரட்டிய டிராமி புயல் – 65 பேர் உயிரிழப்பு!
Saturday, October 26th, 2024
பிலிப்பைன்சில் உருவான டிராமி புயலை அடுத்து ஏற்பட்ட இயற்றை அனர்த்தங்களில் சிக்குண்டு, 65 பேர் உயிரிழந்துள்ளனர்.
பிலிப்பைன்சின் இசபெலா, இபுகாவோ உள்ளிட்ட பல மாகாணங்கள் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும. இங்கு பெய்த கனமழையால் பல நகரங்கள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனமழையை தொடர்ந்து படங்காஸ் மாகாணத்தில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளதுடன் இந்த நிலச்சரிவால் பல வீடுகள் மண்ணில் புதையுண்ட நிலையில், தற்போது அங்கு மீட்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் பலர் நிலச்சரிவில் சிக்கி காணாமற் போயுள்ளதால் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை உயர்வடையலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
000
Related posts:
பாக்கிஸ்தானில் கோரவிபத்து 19 பயணிகள் உடல்நசுங்கி பலி!
மெக்சிகோ வெடிப்பொருட்கள் சந்தையில் பாரிய விபத்து: 12 பேர் பலி!
நாடாளுமன்றத் தேர்தலுக்கு 33 சுயேட்சைக் குழுக்கள் - அரசியல் கட்சிகள் வேட்புமனு தாக்கல்!
|
|
|


