நித்திய வெளிச்சம் எங்கும் உண்டாகட்டும் – நத்தார் வாழ்த்துச் செய்தியில் டக்ளஸ்!

Wednesday, December 24th, 2025


,…….
அந்தகார இருள் நீங்கி நித்திய வெளிச்சம் எங்கும் உண்டாகட்டும் என
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவாவானந்தா தனது நத்தார் வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்,.

குறித்த வாழ்த்து செய்தியில்,  அவர் மேலும் தெரிவிக்கையில் –
உலகத்தின் ஒளியாக, அன்பின் வடிவாக கருணை மைந்தன் இயேசு பிரான் அவதரித்த நம்பிக்கைத்திருநாளாக நத்தார் தினத்தை எமது மக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்,

எமது மக்களின் ஆழ்மன ஆன்மீக விருப்பங்களை ஏற்று
நாமும் நத்தார் தினத்தை நம்பிக்கையோடு வரவேற்கின்றோம்.

இது எமக்கென்று வாக்களிக்கப்பட்ட எமது சொந்த பூமி.
எமது நிலங்கள் எமது மக்களுக்கே சொந்தம்,. 

அந்தகார இருள் சூழ்ந்து கிடந்த எமது தேசத்தின் 
எழிலார்ந்த வாழ்வின் கனவுகளை நெஞ்சில் ஏந்தியபடி
நாமும் இந்த பூமிக்கு வரவழைக்கப்பட்டவர்கள். 

இருண்ட யுகத்தில் இடர்பட்டு நின்ற மக்களை நாம் வெளிச்சத்திற்கு
அழைத்து வந்தவர்கள்,.

இரத்தப்பலிகளும் பசியும் பட்டினியும் ஏழ்மையும் வறுமையும் என
அழுகுரல் கேட்காத,..
எதுவும் இல்லை என்ற குறைகள் ஏதும் இல்லாத,
யாரும் யாருக்கும் அடிமை என்று கொள்ளாத,.

அழகார்ந்த சமத்துவ சமாதான பூமியை நாம் கனவு கண்டவர்கள்.
கனவுகளை வெல்வதற்கு கடும் பயணம் கண்டவர்கள்.
நாமும் எமது மக்களுக்காக அர்ப்பணங்களை ஆற்றியவர்கள்,.

நீதிமான்களின் பாதை சூரிய வெளிச்சமாயிருக்கும்,.. அதற்கு விரோதமானர்வர்களின் பாதை காரிருள் போல் இருக்கும்.

காரிருளில் நடந்து வந்த மக்கள் பேரொளியை கண்டது போல்
எல்லா தூயர்களில் இருந்தும், அனைத்து அநீதிகளில் இருந்தும்
நிமிர்ந்தெழும்  காலத்தை  உருவாக்கவே  நீதிமான்களின் பாதையை வகுத்து
நாம் தொடர்ந்தும் உழைத்து வருபவர்கள்.

இன்று யுத்த இரத்தப்பலிகள் இங்கில்லை,.
ஆனாலும் மறுபடி மக்களை அவலப்பெருங்காட்டில் தள்ளி விட மக்களுக்கு விரோதமானவர்கள் எத்தனிப்பார்கள்,

கடந்த காலங்களைப்போல் பசுந்தரைகள் இருக்க
கற்பாறைகளில் விதைத்து பயனற்றுபோகவே கபடம் செய்வார்கள்.

எமது மக்களை மீட்க வல்லவர்கள் தாமே என பலரும் வந்து நிற்பார்கள்,.
அவர்கள் உள்ளத்தில் உண்மையின்றி பொய்யான மகிமையை புனிதம் என்று போதனை செய்வார்கள்.
மக்களாகிய நீங்கள் புறாக்களை போல் கபடமற்றவர்களாகவும்
சர்ப்பத்தை போல் விழிப்புணர்வுடனும் இருப்பீர்கள் என நம்புகிறேன்,.

இதுவரை கால மனித குல வரலாறுகள் யாவும் மாற்றத்தை நோக்கியே
நகர்ந்து வந்திருக்கிறது.
எமது வரலாற்று வாழ்விடங்களிலும் மாற்றம் ஒன்று செயலில் மலர்வதையே
நாம் விரும்புகிறோம்.

நித்திய வெளிச்சமாய் இருப்பவரை நேசியுங்கள்.
நல்ல கனிதரும் மரங்களை மறுபடியும் அதிகமாக விரும்புங்கள்.

வானமும் பூமியும் ஒழிந்து போனாலும்
என் வார்த்தைகள் ஒரு போதும் ஒழிந்து போகாது என்ற
கருணை மைந்தன் இயேசு பிரானின் நம்பிக்கை வார்த்தை போல்,.நாம் கொண்டிருக்கும் நடை முறை யதார்த்த வழிமுறையும்
எமது கருத்துக்களும் ஒரு போதும் ஒழிந்து போகாது.
இதையே வரலாறு நிரூபித்துள்ளது,

அன்பும் கருணையும் அவனியை ஆழட்டும்.
இருளில் இருக்கும் மக்கள் வெளிச்சத்தை காண்பார்கள்.
இனி வரும் காலம் நல்ல கனிதரும் காலம் ஆகட்டும்
அனைவருக்கும் நத்தார் தின வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்

Related posts: