நாட்டில் 64.1% மக்கள் கணினி பயன்படுத்தத் தெரியாதவர்கள் –  குடிசன மதிப்பீட்டு புள்ளிவிபரத் திணைக்களம்!

Saturday, September 27th, 2025


……
இலங்கையில் மக்கள் மத்தியில் கணனி அறிவு தொடர்பில் புதிய ஆய்வு தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
நாட்டில் 2024ஆம் ஆண்டில் 64.1% மக்கள் கணினி பயன்படுத்தத் தெரியாதவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குடிசன மதிப்பீட்டு புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்ட அண்மைய புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன

இதன் அடிப்படையில் நாட்டில் 5 பேரில் 2 பேருக்கு மட்டுமே கணினி அறிவு உள்ளது தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் கணினி அறிவு விகிதம் இன்னும் குறைந்த மட்டத்திலேயே காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 2023ம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது 2024 ஆண்டில் மக்கள் மத்தியில் கணனி அறிவு 3.1 வீதத்தினால் குறைவடைந்துள்ளது.

குடிசன மதிப்பீட்டு, புள்ளி விபரவியல் திணைக்களம் மேற்கொண்ட ஆய்வு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

Related posts: