நாட்டில் துப்பாக்கிச் சூடுகள், குற்றச் செயல்களை தடுக்க 15 பொலிஸ் சிறப்புப் படைகள்!
Tuesday, August 5th, 2025
நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் குற்றச் செயல்கள் மற்றும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களைத் தடுப்பதற்காக, பொலிஸ் சிறப்புப் படைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
இவ்வாறான குற்றச்செயல்களை தடுக்கும் வகையில் 15 பொலிஸ் சிறப்புப் படைக் குழுக்கள் உருவாக்கப்பட்டதாகவும் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
நாட்டில் இவ்வருடத்தில் இதுவரை பதிவாகியுள்ள 75 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 40 பேர் உயிரிழந்துள்ளதுடன், 43 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மாத்தறைப் பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் மீன் வர்த்தகர் ஒருவர் காயமடைந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்
000
Related posts:
யாழ்ப்பாணத்தில் கேபிள் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் பணம் கொடுத்த மக்கள் அவலத்தில்!
நள்ளிரவுமுதல் பெற்றோலின் விலை அதிகரிப்பு!
சிறை கைதிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பம்!
|
|
|


