நத்தார் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்தவ தேவாலயங்களின் பாதுகாப்பிற்காக 45,000 பொலிஸார் பணியில்!
Wednesday, December 25th, 2024
நத்தார் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களின் பாதுகாப்பிற்காக 45,000 பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்தியாவசியமான இடங்களுக்கு இராணுவ பாதுகாப்பை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நத்தார் பண்டிகையை முன்னிட்டு சிறைக் கைதிகளுக்கு திறந்த வெளியில் பார்வையாளர்களை காண விசேட சந்தர்ப்பமொன்றை வழங்குவதற்கு சிறைச்சாலை திணைக்களம் தீர்மானித்துள்ளது.
சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர், சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி. திஸாநாயக்க இதனை தெரிவித்துள்ளார். மேலும், நத்தார் பண்டிகையை முன்னிட்டு 389 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கிளிநொச்சி பிரதான பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் குறித்து ஆராய்வு!
செயற்திட்டங்களின் பெறுபேறுகளை அறிந்துகொள்வதற்காக பிரதேச செயலகங்களில் செயற்பாட்டுப் பணியகம் நிறுவப்பட...
நாடாளுமன்றத் தேர்தலை நடத்த 11 பில்லியன் ரூபாய் செலவாகும் - தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்...
|
|
|
மக்கள் சேவை செய்வது தொடர்பில் ஈ.பி.டி.பிக்கு யாரும் கற்றுத்தர தேவையில்லை – மாநகரசபையில் தர்சானந்தை வ...
இன்று 02 மணித்தியாலங்கள் 10 நிமிடங்களுக்குமின்வெட்டு - ஜூன் 05 ஆம் திகதி வரை மின்வெட்டு அமுல்படுத்த...
சிங்கப்பூருக்கான இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் ஜனாதிபதி!


