தோழர் ரெங்கன் அவர்களின் பெரியதகப்பனாருக்கு செயலாளர் நாயகம் அஞ்சலி மரியாதை!

Friday, May 1st, 2026


……
செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, தனது பள்ளித் தோழனும் தனது சட்ட ஆலோசகருமான சட்டத்தரணி “தோழர் ரெங்கன்” அவர்களின் பெரியதகப்பனாரின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதுடன் குடும்ப உறவினர்களுக்கும் தனது ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்திருந்தார்.

பிரபல சட்டத்தரணியான தோழர் ரெங்கனின் பெரியதகப்பனார் அமரர் நமசிவாயம் பஞ்சாட்சரம்,
பிரபல ஆங்கில ஆசிரியராக 70 வருடங்கள் பணியாற்றி வந்த நிலையில் வயது மூப்பின் காரணமாக நேற்றையதினம் (30) தனது 97 ஆவது வயதில் காலமானார்.

இந்நிலையில் நீர்வேலி வடக்கில் உள்ள அமரரது இல்லத்தில் பூதவுடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு சென்ற செயலாளர் நாயகம் பூதவுடலுக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியிருந்தார்.

இதன்போது கட்சியின் யாழ் பிரதேச நிர்வாக செயலாளர் றீகன் இளங்கோ, யாழ் மாநகரின் முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா மற்றும் கட்சியின் தோழர்கள் என பலரும் கலந்து தமது அஞ்சலிகளை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: