தோழர் இரவீந்திரன் கலாமானார் !

Saturday, February 22nd, 2025


ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாக செயலாளர் ( தோழர் ரவிவீந்திரன் )அம்பலம் இரவீந்திரதாசன் இன்றையதினம் (  22.02.2024) காலமானார்.

மறைந்த தோழமைக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சி தனது ஆழ்ந்த அஞ்சலிகளை தெரிவித்துக் கொள்கின்றது.

அத்துடன்  மூத்த தோழமையின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் கட்சி தனது ஆறுதலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கின்றது

முன்பதாக கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாகத்தை நிர்வகித்துவந்த தோழர் இரவீந்திரதாசன் அப்பிரதேச சபையின் உறுப்பினராகவும் ஒரு சமாதான நீதிவானாகவும் இருந்து கட்சியின் கொள்கை மற்றும் செயற்பாடுகளை மக்களிடம் கொண்டு செல்வதில் முக்கிய பங்காற்றி வந்திருந்தார்

துடிப்பு மிக்க உத்வேகத்துடன் மக்கள் பணியை முன்னெடுத்து அம்மக்களுக்கும் கட்சிக்குமான  இணைப்பு பாலமாக செயற்படுவந்த தோழர் இரவீந்திரன் கடந்த சில காலமாக  உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் இன்று காலை  (22) அவர் தோழமைகளையும் தான் நேசித்த மக்களையும் விட்டு பிரிந்து  இயற்கை எய்தினார்.

அன்னாருக்கு எமது அஞ்சலி அஞ்சலி மரியாதை.

அன்னாரின் இறுதிக்கியை தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும்.
000

Related posts: