தோழர்களின் சுப நிகழ்வுகளில் கலந்து சிறப்பித்த செயலாளர் நாயகம்!

Tuesday, March 17th, 2026


……
கட்சித் தோழர்களின் உறவுகளது சுப  நிகழ்வுகளில் கலந்துகொண்ட செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நிகழ்வுகளின் நாயகர்களுக்கு தனது நல்லாசிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தார்.

குறிப்பாக கட்சியின் சாவகச்சேரி பிரதேச உதவி நிர்வாக செயலாளர் மருதை தர்சனின் சகோதரனின் திருமண நிகழ்வு நேற்றையதினம் (15) சாவகச்சேரியில் இடம்பெற்றிருந்தது.

குடும்பத்தவர்களது முதன்மை அழைப்பின் பேயரில் நிகழ்வில் கலந்து சிறப்பித்த செயலாளர் நாயகம் மணமக்களுக்கு தனது நல்லாசிகளை வழங்கியதுடன் வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தார்.

இதேநேரம் கட்சியின் செயற்பாட்டாளரான விசிந்தன் தம்பதியினரது புதல்வியின் பிறந்ததின நிகழ்விலும் (16) கலந்து சிறப்பித்து ஆசிகளையும் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts: