டிக் டொக் நபருக்காக வீட்டில் நகைகளைக் களவாடிய யுவதி –  7 பேர் சாவகச்சேரி பொலிசாரால் கைது!  

Tuesday, July 29th, 2025

டிக் டொக் பிரபலம் ஒருவருக்கு, உந்துருளி வாங்க வீட்டில் நகைகளைக் களவாடிய யுவதி உள்ளிட்ட 7 பேரை, சாவகச்சேரி காவல்துறையினர் இன்று (29) கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர், டிக் டொக் சமூக வலைத்தளங்களில் தனது காணொளிகளைப் பதிவேற்றி தன்னைப் பிரபலமானவராக காட்டிக் கொண்டு வந்துள்ளார்.

குறித்த இளைஞனுடன் டிக் டொக் மூலம் அறிமுகமான சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த யுவதி, அவரை காதலித்து வந்துள்ளார்.

அந்தநிலையில் காதலனுக்காக, அதிநவீன உந்துருளி ஒன்றினை கொள்வனவு செய்வதற்குத் தனது வீட்டிலிருந்து சுமார் 19 பவுண் நகையைத் திருடி, அதனைக் காதலனிடம் கொடுத்துள்ளார்.

அதைத் தொடர்ந்து, வீட்டிலிருந்த நகைகள் காணாமல் போனமை தொடர்பில், யுவதியின் பெற்றோர் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

குறித்த முறைப்பாட்டின் பிரகாரம், விசாரணைகளை முன்னெடுத்த பொலிசார் யுவதி மீது சந்தேகம் கொண்டு அவரிடம் விசாரணைகளை முன்னெடுத்த போது, வீட்டிலிருந்த நகைகளைத் திருடி, காதலனுக்கு வழங்கியதை ஒப்புக் கொண்டுள்ளார்.

யுவதியின் வாக்கு மூலத்தின் அடிப்படையில், குறித்த யுவதியின் காதலனை பொலிசார் கைது செய்தனர்.

மேலும், வீட்டில் நகைகளைத் திருடிய யுவதி, அவரது காதலன், நகைகளைத் திருடுவதற்கு உடந்தையாகச் செயற்பட்ட யுவதியின் நண்பி, நகைகளை விற்க உதவியவர்கள், நகைகளை வாங்கியவர்கள் என 7 பேரைக் பொலிசார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட 7 பேரும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு, அவர்களிடம் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.

000

Related posts:


எரிபொருள் விநியோகத்தின் போது பொதுப்போக்குவரத்துக்கு முன்னுரிமை வழங்குங்கள் - தனியார் பேருந்து உரிமை...
புதிய மத்திய வங்கிச் சட்டம் - நாட்டின் பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்திய விடயத்திற்கு முற்றுப்புள்ளி வை...
 அஞ்சல்மூல வாக்குச் சீட்டுகளை எதிர்வரும் ஏப்ரல் 5 ஆம் திகதி தேர்தல் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கத் திட்ட...