சுதந்திர நாடாக மாறும் பாகிஸ்தானின் மிகப் பெரிய மாகாணமான பலுசிஸ்தான் – இந்திய ஊடகங்கள் செய்தி!
Thursday, May 15th, 2025
பாகிஸ்தானுக்கு சொந்தமான மிகப்பெரிய மாகாணமாகக் கருதப்படும் பலுசிஸ்தான், தனி சுதந்திர நாடாக மாறும் என, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பலுசிஸ்தானின் தலைவர் என கருதப்படும் மிர் யார், வெளியிட்ட எக்ஸ் தள பதிவின் மூலம் இந்திய ஊடகங்கள் இதனைத் தெரிவித்துள்ளன.
பலுசிஸ்தானை, பாகிஸ்தானின் ஒரு பகுதி என்று அழைப்பதை தவிர்க்க வேண்டும் என்று பலுசிஸ்தானின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ”நாங்கள் பாகிஸ்தானியர்கள் அல்ல, பலுசிஸ்தானியர்கள்” என்றும் ”ஐக்கிய நாடுகள் சபையும் பலுசிஸ்தானை தனி நாடாக அங்கீகரிக்க வேண்டும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
கிளிநொச்சி மாவட்டத்தில் சமூகப் பரவல் கணிசமானளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது - மாவட்ட சுகாதார சேவைகள் ப...
யாழ்.போதனா வைத்திய சாலையில் மலேரியா நோயாளி ஒருவர் இனம் காணப்பட்டுள்ளார்!
மாகாண சபைத் தேர்தல் வேட்புமனு - அடுத்த வாரம் கலந்துரையாடப்படும் என பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும்...
|
|
|


