சாவகச்சேரியில் கிணறொன்றிலிருந்து வயோதிப பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பு!
Friday, January 3rd, 2025
யாழ்ப்பாணம் – சாவகச்சேரியில் கிணறொன்றிலிருந்து வயோதிப பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இந்த சடலமானது யாழ். சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிராம்புவில் பகுதியில் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் –
வயல் ஒன்றுக்கு பசளை இடச் சென்றவர்கள், வயல் கிணற்றுக்குள் வயோதிப பெண் ஒருவரின் சடலம் மிதப்பதைக் கண்ணுற்று பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
அதனை தொடர்ந்து பொலிஸார் சடலத்தை மீட்டு சாவகச்சேரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைகளுக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
000
Related posts:
நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை - எரிசக்தி அமைச்சர் அறிவிப்பு!
பாடசாலை மூலம் தடுப்பூசியைப் பெற முடியாத மாணவர்கள் வைத்தியசாலைகளில் பெற்றுக்கொள்ள முடியும் - சுகாதார ...
நெருங்கும் ஜனாதிபதி தேர்தல் - 10 மில்லியனுக்கும் அதிகமான உத்தியோகபூர்வ தேர்தல் வாக்காளர் அட்டைகளை வி...
|
|
|


