சட்டத்தரணி சுட்டுப் படுகொலை – யாழில் சட்டத்தரணிகள் பணிப்பகிஸ்கரிப்பு!
Monday, February 16th, 2026
……..
சட்டத்தரணி மல்வாரச்சி மற்றும் அவரது மனைவி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து யாழ் மாவட்ட சட்டத்தரணிகள் இன்று (16) முழு நேர பணிப்பகிஸ்கரிப்பை முன்னெடுத்துள்ளனர்.
சட்டத்தரணிகளின் குறித்த போராட்டத்தால் யாழ் மாவட்டத்தில் இன்று வழக்குகளை எதிர்கொண்ட பலர் இடர்பாடுகளுக்கு உள்ளாகியிருந்தனர்.
சில தினங்களுக்கு முன்னர் தலங்கம, அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மல்வாரச்சி மற்றும் அவரது மனைவியும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடருடையவர்களால் சுட்டுக்கொல்லப்பட்டதாக கருதப்படுகின்றது.
இந்தக் கொடூரச் சம்பவத்திற்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தனது வன்மையான கண்டனத்தைப் பதிவு செய்திருந்தது.
அத்துடன் இந்த தாக்குதல் நாட்டின் சட்டத்தின் ஆட்சிக்கு விடுக்கப்பட்ட பாரிய அச்சுறுத்தல் என்றும்,
குற்றவாளிகளைத் தாமதமின்றி கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்றும்,
எதிர்காலத்தில் சட்டத்தரணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அதிகாரிகள் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என வலியுறுத்தியிருந்தனர்.
இதேநேரம் இவ் ஆண்டுத் இதுவரையான குறுகிய காலப்பகுதிக்குள் நாட்டில் 7 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில் 7 பேர் உயிரிழந்துள்ளதோடு, நால்வர் காயமடைந்துள்ளமை மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


