சங்கானை பேருந்து நிலைய முச்சக்கரவண்டி விவகாரம் – உரிய பொறிமுறைகளுடன் தீர்வு – தவிசாளர் தெரிவிப்பு!

……..
சங்கானை பேருந்து நிலையத்தில் பதிவின்றி சேவை மேற்கொள்ளும் முச்சக்கரவண்டி உரிமையாளர்களின் சங்கப் பதிவுப் பிரச்சினைக்கு உரிய பொறிமுறைகள் உள்ளீர்க்கப்படு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என தவிசாளர் ச.ஜெயந்தன் தெரிவித்துள்ளார்.
வலி. மேற்கு பிரதேச சபையின் மாதாந்த கூட்டம் இன்று (23) சுழிபுரத்திலுள்ள சபையின் சபா மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது பிரதேசத்தில் முன்னெடுக்கப்படவுள்ள பல்வேறு விடயங்களை சபையில் பிரஸ்தாபித்த தவிசாளர், அவற்றின் சாதக பாதக நிலைகளை உறுப்பினர்களிடமிருந்து கோரியிருந்தார்.
இதன்போது குறித்த முச்சக்கர வண்டி சங்க பதிவுக்காக கிடைக்கப்பெற்ற கோரிக்கையை சபைக்கு பிரஸ்தாபித்து அதற்கான அனுமதி வழங்குவது குறித்து விவாதத்திற்கு விட்டிருந்தார்
பல்வேறு வாதப்பிரதிவாதங்களின் இறுதியில் அப்பகுதி பிரதேச சபையின் நிலம் என்பதாலும் குறித்த இடம் பேருந்து நிலையமாக இருப்பதாலும் எதிர்கால சவால்களை கருத்தில் கொண்டு குறித்த இடத்தை நிரந்தர தரிப்பிடமாக வழங்காதிருக்கவும் அதற்கு ஈடாக புதிய ஓர் இடத்தில் புதிய ஒரு பொறிமுறையுடன் பேருந்து நிலையத்தில் இருந்து சேவையை முன்னெடுக்க ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என சபையில் தீர்மானம் எடுக்கப்படுவதாக தவிசாளர் அறிவித்திருந்தார்.
இதனிடையே கடந்த கூட்ட அறிக்கை பிரஸ்தாபிக்கப்பட்ட போது சபையின் உறுப்பினர்களால் அதிகளவான தவறுகள் சுட்டிக்காட்டப்பட்டன.
அத்துடன் உள்ளூராட்சி மன்ற அறிக்கையிடலில் உறுப்பினர்களுக்கிடையிலான வாதப்பிரதிவாதங்கள் கூட்டக் குறிப்பில் அறிக்கையிடப்படாமையை சுட்டிக்காட்டிய உறுப்பினர்கள், இவ்வாறான தவறுகள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள், அதற்காக உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துக்கள் மறைக்கப்படுவதான நிலையை உருவாக்குவதாகவும்
சுட்டிக்காட்டியதுடன் அத்தகைய செயற்பாட்டுக்கு தமது கண்டனங்களையும் தெரிவித்திருந்தனர்.
மேலும் தனியார் கல்வி நிலைய பதிவு தொடர்பில் வலுயுறுத்தப்பட்டதுடன்
வீதி விளக்கு பொருத்தல் பொருத்தல் தொடர்பில்
உள்ளூராட்சி ஆணையாளர் பராமரிப்பு மின்சார சபையின் அனுமதி பெற்ற தொழிலாளர்களை தவிர ஏனையோருக்கு தடைவிதித்துள்ளதாக அறிவித்துள்ளதாக தெரிவித்தார்
இதற்கு சபை உறுப்பினர்கள் மின்சார சபைக்கு பெரும் நிதி செலவு கொடுக்கும் நிலை உருவாகும். இது சபையால் ஈடு செய்ய முடியாது.
ஆகவே மின்சார சபையின் பயிற்சிக்காக சபையால் சிலரை அனுப்பி பயிற்சியளிக்க நடவடிக்கை எடுக்கக்கபடும் என்றும் தெரிவித்தார்.
மேலும் சங்கானை பொதுச்சந்தையை ஒரு குடைக்குள் கொண்டுவருவது மற்றும் வாகன தரிப்பிடம் உள்ளிட்ட விடையங்களும் ஆராயப்பட்டன.
000
Related posts:
|
|