கியூ.ஆர். குறியீடு –  இதுவரை 51 இலட்சத்திற்கும் அதிகமான வாகனங்கள் பதிவு!

Tuesday, March 17th, 2026


….
நாட்டில் மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ள எரிபொருள் கியூ.ஆர். குறியீடு முறைமையின் கீழ் இதுவரை 51 இலட்சத்திற்கும் அதிகமான வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில் –

இந்த முறைமையின் கீழ்
இதுவரை 5,103,991 வாகனங்கள் வெற்றிகரமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இன்று (17) காலை 9.00 மணி நிலவரப்படி, இதற்கு முன்னர் கியூ.ஆர். முறைமையைப் பயன்படுத்தாத 439,997 புதிய வாகனங்கள் புதிதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தற்போது 5,094,566 பேர் இந்த முறைமையினைப் பயன்படுத்தி எரிபொருளைப் பெற்று வருகின்றனர்.

இந்த கியூ.ஆர். முறைமையில் நிலவிய தொழில்நுட்பக் கோளாறுகள் மற்றும் குறைபாடுகள் குறித்து கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர், முறைமையிலிருந்த 95 சதவீத குறைபாடுகள் தற்போது சரிசெய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

முறைமையைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அதனைத் தடையின்றி இயக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் உறுதியளித்தார்
000

Related posts:

அடுத்த சில மாதங்களில் கொரோனா ஒழிக்கப்பட்ட நாடாக இலங்கை மாற்றம்பெறும் – சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்ப...
மூத்த அரசியல்வாதிகளின் எந்த விதமான ஒத்துழைப்புமின்றி செயற்படுவது சிக்கலாக உள்ளது - அமைச்சர் ஜீவன் தொ...
இந்து சமுத்திரம் என்பது ஒரு எழுச்சி அல்ல - அது நாகரிகம் - சமுத்திரத்தின் கடல்சார் சுதந்திரத்தின் ...