காற்றாலை மின் உற்பத்திக்கு எதிரால கிராஞ்சியில் 28 ஆம் திகதி மக்கள் போராட்டம் – அணிதிரண்டு வருமாறு ஏற்பாட்டுக்குழு அழைப்பு!
Tuesday, May 26th, 2026!
…….
காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிம அகழ்வுகளால் பறிபோகும் எமது பிரதேசத்தின் இருப்பையும் மக்களின் வாழ்வையும் பாதுகாக்க எதிர்வரும் 28 ஆம் நாளன்று கிரஞ்சி பொன்னாவெளி வலைப்பாடு ஆகிய பிரதேசங்களின் பொது அமைப்புகளை ஒன்றிணைத்து போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாககுறித்த போராட ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது.
இது தொடர்பில் ஊடக சந்திப்பொன்றை யாழ் ஊடக அமையத்தில் முன்னெடுத்த கிரஞ்சி பொன்னாவெளி வலைப்பாடு ஆகிய பிரதேச ஒன்றுபட்ட அமைப்பின் செயலாளர் சங்கரப்பிள்ளை ஆனந்தனடராசன் மேலும்கூறுகையில் –
கிராஞ்சி, பொன்னாவெளி, பாலாவி போன்ற எமது பிரதேசங்களின் இருப்பை உறுதி செய்யவும் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவுமே நாம் இந்த போராட்டத்தை முன்னெடுக்கின்றோ.
இதற்காக எதிர்வரும் 28 ஆம் நாளன்று வேரவில் வைத்தியசாலை முன்பாக அடையாளப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்து ஊர்வலமாக சென்று கற்பக விநாயகர் ஆலயம் முன்பாக ஒன்று கூடி எமது கோரிக்கையை வலியுறுத்தவுள்ளோம்.
நாட்டில் நடந்த யுத்தத்தால் வெளியேறி மீண்டும் மீள் குடியேறிய இடம்தான் எமது பகுதி.
அந்த அழிவுகளிலிருந்து தற்போதுதான் மீண்டுவர நாம் முயற்சிக்கின்றோம் .
ஆனாலும் அடிப்படையான தேவைகள் எதுவும் எமக்கு இன்னமும் கிடைக்கப் பெறவில்லை.
இன்நிலையில் தேசிய அபிவிருத்தி என்ற பெயரில் எமது பகுதியில் காற்றாலை மற்றும் கனிம அகழ்வு என்ற திட்டங்கள் முன்னெடுகவுள்ளதாக கூறப்படுகின்றது.
ஏற்கனவே சுண்ணக்கல் அகழ்வுப் பிரச்சினையும் இங்கு இருக்கின்றது.
காற்றாலைத் திட்டம் கிராஞ்சி வலைப்பாடு பொன்னாவெளி ஆகிய பகுதிகளை மையமாக கொண்டு இயக்கப்பட இருக்கின்றது.
இங்கு 34 காற்றாலை கம்பங்கள் வர இருக்கும் நிலையில் 14 கம்பங்கள் மக்கள் தொழிலிடங்களை மையமாக கொண்டு வர இருக்கின்றது.
இந்த பகுதியை கைவிட்டு ஏனைய இடங்களில் மேற்கொள்ளுமாறு தான் நாம் கோரிவருகின்றோம்.
அது தொடர்பில் துறைசார் அமைச்சர் அதிகாரிகள் என துறைசார் வல்லுனர்கள் என பலரும் இந்த இடத்தில் வருகைதந்து ஆய்வுகளை முன்னெடுத்த போது அதற்கு நாம் எதிர்ப்பு காட்டியிருந்தோம்.
ஆனாலும் அவர்கள் எவரும் எமது கருத்துக்குச் செவிசாய்ப்பதாக இல்லை.
எமது நியாயங்களை கண்டுகொள்ளாத இந்த அதிகாரிகளின் செயற்பாடுகளை கண்டித்தும் நியாயம் கோரியுமே 28 ஆம் நாளன்று போராட வீதிக்கிறங்கவுள்ளோம்.எமது போராட்டத்துக்கு மக்களுடன் பொது அமைப்புகளும் ஒன்றிணைந்தி ஆதரவு தர முன்வரவேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.
Related posts:
|
|
|


