காங்கேசன்துறையிலிருந்து நாகபட்டினம் நோக்கி  புறப்பட்ட பாய்மரப் படகுகள்!

Friday, April 4th, 2025

நேற்றையதினம் சென்னையில் இருந்து காங்கேசன்துறைக்கு, 10 பேர் அடங்கிய 2 பாய்மரப்படகுகள் மாலை 7.30 மணியளவில் வந்தடைந்த நிலையில் இன்று காலை 10.30 மணியளவில் மீண்டும் காங்கேசன்துறையில் இருந்து நாகபட்டினம் நோக்கி பயணத்தை ஆரம்பித்துள்ளன.

400 கிலோமீற்றர் தூரத்தினை இலக்காக்கொண்டு “Royal madras yacht club”  அங்கத்தவர்களால்  சென்னையில். ஆரம்பிக்கப்பட்ட இப்படகுப் பயணம் நாகப்பட்டினத்தினை அடைந்து அங்கிருந்து காங்கேசன்துறையை வந்தடைந்தனர்.

இன்று மீண்டும் நாகப்பட்டினம் நோக்கி புறப்படுகின்ற இப்படகு பின்னர் பூம்புகாரை அடைந்து அங்கிருந்து பாண்டிச்சேரியை சென்றடைந்து அங்கிருந்து கோவளத்தினையும் இறுதியில் மீண்டும் சென்னையை சென்றடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: