கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை – அனைத்து கற்றல் செயற்பாடுகளும் எதிர்வரும் 11 ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை !
Friday, March 7th, 2025
2024 கல்விப் பொதுத்தராதர சாதாரண தரபரீட்சையை இலக்காக கொண்ட அனைத்து கற்றல் செயற்பாடுகளும் எதிர்வரும் 11 ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை விதிக்கப்படவுள்ளன.
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, 2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான பிரத்தியேக வகுப்புகள், கருத்தரங்குகள், செயலமர்வுகள் மற்றும் பயிற்சி பட்டறை என்பவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கல்விப் பொதுத்தராதர சாதாரணத் தர ப்பரீட்சை எதிர்வரும் 17 ஆரம்பமாகவுள்ளது.
000
Related posts:
அறநெறிப் பாடசாலை பாடத்திட்டத்தில் யோகா - இந்து கலாசார அலுவல்கள் திணைக்களம் !
பௌத்த சித்தாந்தத்தினூடாக பெற்றக்கொண்ட ஒழுக்கமானது தேசிய மற்றும் மத நல்லிணக்கத்தை முன்னேற்றுவதற்கு பா...
இலங்கையில் முக்கிய சந்திப்புக்களை முன்னெடுத்தார் அமெரிக்க திறைசேரியின் ஆசியாவிற்கான பிரதி உதவி செயலா...
|
|
|


