ஒதுக்கப்பட்ட நிதியில் 45 மில்லியன் நிதியை அபகரிக்கின்றதா மத்திய அரசு – புவி குற்றச்சாட்டு!

Wednesday, March 25th, 2026


………..
கிராமிய வீதி அபிவிருத்தி நிகழ்த்தி திட்டம் 2025 – 2026 இன் கீழ் பிரதேச ஒருங்கிணைபுக் குழுவால் ஊர்காவற்றுறை பிரதேச சபையூடாக மேற்கொள்ளப்படும் திட்ட முன்மொழிவுகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் 45 மில்லியன் நிதி மத்திய அரசால் பறிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய குறித்த பிரதேச சபையின் ஈ.பி.டி.பியின் உறுப்பினர் கி.புவி, மக்களின் தேவைகருதிய ஒதுக்கீட்டைக் கூட வழங்க முடியாத வங்குரோத்து நிலைக்கு இன்றைய அரசு வந்துள்ளதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

சபை அமர்வின்போது
யாழ் மாவட்ட சுற்றுலாத்துறை உப குழு கூட்டத்தில் எடுக்கப்பபட்ட தீர்மானத்தின் அடிப்படையில் 10 மில்லியன் நிதி ஊர்காவற்றுறை பிரதேச அபிவிருத்திக்கு அல்லது சுற்றுலாத்துறையின் மேம்மாட்ட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்த்தார்.

இதன்போது குறித்த நிதி ஒதுக்கீட்டின் விபரங்களை சுட்டிக்காட்டிய புவி மிகுதி நிதி எங்கு சென்றது என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.

குறிப்பாக பிரதேசத்தின் அனைத்து வரலாற்று இடங்களுக்கு பெயர்ப் பலகையினை காட்சிப்படுத்தலுக்காக 4.3 மில்லியனும், ஊர்காவற்றுறை இறங்குதுறையை அண்மித்த பகுதிகளில் கல்லிலால் ஆன ஆசனங்களை நிறுவுவதற்கு ஒரு மில்லியனும் , புளியந்தீவு இறங்குதுறை புனரமைத்தலுக்கு 30.25 மில்லியனும், கண்ணகியம்மன் இறங்குதுறையில் மலசல கூட தரிப்பிட வசதி மற்றும் ஓய்வு மண்டபம் நிர்மாணித்தலுக்கு 14.21 மில்லியனும், கண்ணகை அம்மன் இறங்குதுறை இணைப்பு வீதி மற்றும் பாலம் புனரமைத்தலுக்கு 16 மில்லியனுமாக 55 மில்லியன் நிதி பிரதேசத்திற்கு முன்மொழியப்பட்டு ஒதுக்கீடு செய்வதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் தற்போது குறித்த 55 மில்லியன் நிதியில் 10 மில்லியனே வழங்கப்படுவதாக கூறுகின்றீர்கள்.

அப்படியானால் ஏன் மிகுதி 45 மில்லியன் நிதியை வழங்குவதில் அரசு பின்வாங்குகின்றது.
அரசின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எமது மக்களுக்கு பொய் கூறுகின்றார்களா? அல்லது அவர்களிடம் அத்துட்டத்தை முன்னெடுக்கும் ஆற்றல் இல்லையா? அழுமை இல்லையா?

கடந்த காலங்களில் எமது கட்சி ஆட்சியில் இருந்தபோது மத்தியிடமிருந்தும் விசேட நிதிகள் பெற்று திட்டங்களை மக்களுக்காக முன்னெடுத்திருந்தோம்.
அவ்வாறான நிலையில் ஏன் இன்று அவ்வாறு நிதியை பெறமுடியாதிருக்கின்றது என்றும் கேள்வி எழுப்பியதுடன் உரிய நிதியை கிடைக்கச் செய்ய ஆட்சியாளர்கள் முன்வரவேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.
000

Related posts: