உக்ரைனுக்கு எதிராகச் சக்திவாய்ந்த ஏவுகணைகளைப் பயன்படுத்த தாயாராகும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் அறிவிப்பு!

Saturday, November 23rd, 2024

உக்ரைனுக்கு எதிராகச் சக்திவாய்ந்த ஏவுகணைகளைப் பயன்படுத்தவுள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் தெரிவித்துள்ளார்.

அந்த நாட்டு ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது உக்ரைனில் போர் நிலைமையை மேலும் மோசமாக்கும் எனவும் ரஷ்ய ஜனாதிபதி கூறியுள்ளார்.

முன்னதாக அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளின் ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்த ஆரம்பித்துள்ளது.

இதற்குப் பதிலளிக்கும் வகையில் யுக்ரைனின் டினிப்ரோ மீது ரஷ்ய புதிய ஏவுகணை தாக்குதல்களை நடத்தியிருந்தது.

இந்தநிலையிலும் மேலும் சக்திவாய்ந்த ஏவுகணைகளைப் பயன்படுத்தவுள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், உலக நாடுகளின் தலைவர்கள் இதற்குக் கடுமையான பதிலை வழங்க வேண்டும் என உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமீர் ஷெலென்ஸ்கி கோரியுள்ளார்.

00

Related posts: