ஈழத்து எழுத்தாளர் அமரர் வள்ளியம்மையின் இறுதி நிகழ்வில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கலந்து அஞ்சலி மரியாதை!
 Monday, June 30th, 2025
        
                    Monday, June 30th, 2025
            
…..
ஈழத்து எழுத்தாளரும் சமூக உணர்வாளருமான அமரர் வள்ளியம்மை சுப்பிரமணியம் அவர்களின் இறுதி நிகழ்வில் கலந்து கொண்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், தனது இறுதி அஞ்சலி மரியாதையை செலுத்தினார்.
இதன்போது, செயலாளர் நாயகத்தின் பிரத்தியேக செயலாளர் தோழர் தயானந்தா, கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலர் தோழர் ஜீவன் மற்றும் வட்டுக்கோட்டை பிரதேச நிர்வாக செயலாளர் தோழர் செல்வக்குமார் ஆகியோரும் கலந்து கொண்டு தமது அஞ்சலி மரியாதையை செலுத்தினர்.
மூத்த இடதுசாரி தலைவர்களுள் ஒருவரான கே.ஏ. சுப்பிரமணியத்தின் துணைவியாரான அமரர் வள்ளியம்மை அவர்கள், தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் சிறுபாராயத்தில் இருந்து அவரின்  நலன்களில் அக்கறை கொண்டு  பரிவுடன் ஆலோசனைகள் வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
,000
Related posts:
160 தற்கொலை குண்டுதாரிகள் பதுக்கியிருப்பதாக தகவல்!
கடும் வரட்சி: இரணைமடு குளத்தின் நீர்மட்டம் வெகுவாக குறைவு!
உயர்தரம், புலமை பரிசில் பரீட்சைக்கான திகதி இந்தவாரம் அறிவிப்பு - பரீட்சைகள் திணைக்களம்!
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        